பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 உள்ளே நுழைந்து 'தர்மாஸ் பிளாஸ்’கிலிருந்த காப்பியைக் குடித்துவிட்டுச் சாய்வு நாற்காலியில் சாய்ந்தார். மனதுக்கு நிம்மதி இல்லை. தன் வாழ்நாளிலேயே ஏற்படாத அவமானம் அன்று ஏற்பட்டு விட்டதாக அவருக்குப் பட்டது: சடாரென்று எழுந்து உட்கார்ந்து முனிசிபாலிட்டிக்கு ஒரு புகார் மனு எழுதினார். அந்த மனுவில் அவருடைய கற்பனாசக்தியை வேண்டியமட்டும் கையாண்டு, கக்கையாவை வேலையை விட்டு நீக்கும் விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஆத்திரம் சற்றுத் தணிந்தது. மீண்டும் நாற்காலியில் சாய்ந்து கொண்டார்; அப்படியே கண்ணயர்ந்து விட்டார். இரவு பத்து மணிக்குக் குழந்தை பரிவாரங்களின் அட்ட காசத்துடன் சீதாதேவி உள்ளே நுழைந்தாள். அரைத் தூக்கத்திலிருந்த அய்யர் அரவம் கேட்டு விழித்துக் கொண்டார். வந்ததும் வராததுமாக வாயாடி அழகு, இழுத்து இழுத்து விஷயத்தைச் சொன்னாள்: அப்பா, வண்டிக்காரன் ஏமாத்திப்புட்டாம்ப்பா! சினிமா முடிஞ்சி வந்து பார்த்தா வண்டியைக் காணவே, காணோம்!” 'அப்புறம், நடந்தா வந்தேள்?' என்று தூக்கி வாரிப்போட்டுக் கொண்டு எழுந்தார் அய்யர். 'ஐயோ, கேளேன்! வண்டியைக் காணலையா? எப்படிடா ஆத்துக்கு வரதுனு முழிமுழின்னு முழிச்சிண்டிருந்தோம். அம்மா பயந்தே போயிட்டா. அம்பிப் பயல் என்னடான்னா, தூக்கக் கலகத்திலே 'வில், வில்’னு கத்த ஆரம்பிச்சுட்டான்! - அப்பத்தான் י יו நல்ல வேளையா நம்ம தோட்டி வந்தாம்ப்பா...! தோட்டியா?” "ஆமாம்ப்பா, நம்மாத்துத் தோட்டியில்லே கக்கையா, அவன் வந்து, 'நான் கொண்டு போய் விடட்டுமாம்மா?'ன்னு கேட்டான்...' 'அப்படின்னா, உங்களுக்குத் துணையா அவனா வந்தான்...?' 'ஆமாம் அப்பா, பேபியும் இடுப்பிலே தூக்கிக்கணும்னு அழறா, அம்பிப் பயலும் தூக்கிக்கோன்னு கத்தறான். அம்மா என்ன செய்வா? அப்புறம் கக்கையாதான் அம்பிப் பயலைத் தூக்கிண்டான்; ஜம்’னு அவன் தோளிலே சவாரி சேஞ்சுண்டு வந்தது.இது வர வழியிலே ஒரனாவுக்குப் பழம் வேறே