54 அவன் குரல் அடியோடு மாறிப் போயிருந்தது. குரல் மட்டுமா, அவனே உருமாறி இருந்தான். என் கையைப் பற்றிக் கொண்டு 'மாடிக்கு வா,' என்றான். என் மைத்துனனை வீட்டுக்கு அனுப்பிவிட்டு நான் மட்டும் அவனோடு போனேன். வீதிப் புறத்துத் தாழ்வாரத்தில் இரண்டு சாய்மானங்கள் கிடந்தன. நானும் அவனும் அதில் அமர்ந்தோம். சிறிது நேரம் எங்களிடையே மெளனம் நிலவிற்று. அவன் பார்வை உயரப் பாய்ந்தது. சலவைக் கல்லில் செதுக்கப்பட்டிருந்தனர் கிருஷ்ணனும், ராதையும்! சிலைகளின் கை கோர்த்திருந்தது. கிருஷ்ணனுடைய இடது கையில் குழல். ராதையின் வலது கையில் தாமரை மலர். சிலைகள் ஒன்றையொன்று பார்த்தவாறு நிறுத்தப் பட்டிருந்தன. ராதா கிருஷ்ண விஹாரம்' என்று எழுத்துக்கள் பளிச்சிட்டன. கண்கள் திறந்தது திறந்தபடி இருந்தன. மறுகணம் ஆழ்ந்த உணர்ச்சி வெளிப்பட 'ஹா' என்றலறினான் கிட்டு. நான், அவன் முகத்தைப் பார்த்தேன் . என் மனம் படபடத்தது. அழகும் சாந்தமும் இணைந்த இவன் எவ்விதம் இப்படி மாறிப் போனான்? கண்களில்தான் எவ்வளவு ஏக்கம், வெறும் எலும்புக்கூடு என்னும் படி உலர்ந்து தீய்ந்து போயிருந்தான். அழகு என்னதான் கருகியும் கூட அவனுடைய முகம் அந்தப் பழைய கம்பீரத் தோற்றத்தை இழக்கவில்லை. காவியேறிய வேஷடியும், பரட்டைத் தலையும் ஏக்கம் குடிகொண்ட கண்களும்-என்னால் எண்ணிப் பார்க்கக்கூட முடியவில்லை. அப்போது நாங்களிருவரும் கோலார் தங்கச் சுரங்கத்தில் மானேஜர்களாக இருந்தோம். இதே ரங்கூனில் அவன் தகப்பனார் துறைமுகத்தில் வேலையாக இருந்து ஏராளமாகச் சம்பாதித்துக் கொண்டு இந்தியாவுக்கு வந்திருந்தார். ஆனால் கிட்டு, சுரங்கத்தில் வேலைக்கு வந்தவுடனே பாவம், அவன் தகப்பனார் தாயார் இருவரும் மடிந்து விட்டார்கள். பெங்களுரில் ஒரு ஹோட்டலில் அவன் தங்கினான். நான் குடும்பத்தோடு இருந்தேன்.
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/56
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை