55 முதல் ஆறுமாதத்தில் அவன் மிகவும் ஆனந்தமாகத்தான் இருந்தான். ஆனால் திடு மென்று அவன் எதற்காகத் தெற்கே போய் வந்தானோ? வரும்போதே ஆள் மாறிவிட்டான். என்ன முயன்றும் என்னிடம் அவன் ஒன்றும் சொல்லவில்லை. வாழ்க்கையில் பற்றின்றி, ருசியின்றி வாழ்ந்தான். சாதாரண மாக தனிமையை அருவருத்து வெறுப்பவன் அவன். அவனுக்கு இப்போதோ கதவை அடைத்துக் கொண்டு உள்ளே அடைந்து கிடப்பதே வழக்கமாகி விட்டது. திடீரென்று சுரங்கத்தில் வெடி விபத்து நேர்ந்தது. அதன் காரணமாக எல்லோருக்கும் ஒருமாத லீவு. கிட்டு மறுபடியும் ஊருக்குப் போனான். ஒரு வாரம் கழித்து ஒருநாள் மாலை 'திடுதிடு வென்று உள்ளே வந்தான், என்னைத் தேடி. 'எப்போது வந்தாய், உட்கார்!’ என்று உபசரித்தேன். நான் வந்து ஒருவாரமாச்சு, சுந்தரம். ஒரு கொலை செய்துவிட்டேன்' என்றான். அவன் முகம் குரல் எல்லாம் உருமாறின. திடுக்கிட்டு அவன் முகத்தைக் கூர்ந்து பார்த்தேன். 'ஏன் அப்படிப் பார்க்கிறாய்? குடி வெறியில்லை. கொலை என்ற வார்த்தை வெறுப்பாயிருந்தால் வேண்டாம். ஒரு சாவுக்குக் காரணமாகிவிட்டேன் நான்... ஆமாம்...!' என்று மீண்டும் பதறினான். 'ஆமாம் என்ன சங்கதி, ஏணிப்படி பிசாசு பிடித்த மாதிரி காணப்படுகிறாய்...? கொலை, கிலை என்று வேறு பிதற்று கிறாய்!” என்று கேட்டேன். அவன் ஒன்றும் கூறாமல், வெறிபிடித்தவன் மாதிரி கிளம்பிவிட்டான்! இத்தனை ஆண்டுகள் கழித்து இன்றுதான் அவனைச் சந்திக்கிறேன். 'சுந்தரம், இங்கே என்ன காரியமாக வந்தாய்?' என்று கிட்டு கேட்டான். 'தங்கையை அவள் புருஷனிடம் கொணர்ந்து விடவந்தேன். நீ இங்கே என்ன செய்கிறாய்?' என்று பதிலுக்குக் கேட்டேன் நான்.
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/57
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை