56 அவன் பேசவில்லை. அந்த வர்ண விளக்குகளைத்தான் பார்த்தான் அவன். முகம் வெளிறியது. சுந்தரம், எதைச் சொல்வது, எதை மறைப்பது? ஆனால் உன்னைத் தவிர யாரிடமும் சொல்லப் போவதில்லை; கேள், சுரங்க விபத்து லீவிலே நான் ஊருக்குப் போனது உனக்கு நினைவிருக்கிறதல்லவா?...' 'இல்லாமலென்ன? அன்று ஓடிய ஆள்தானே நீ? இன்று தெய்வச் செயலாக உன்னைக் கண்டேன்...' 'அது சரி, இந்தப் பெரிய வாசக சாலையை கட்டியது நீ என்று கேள்விப்பட்டேனே. உண்மைதானா கிட்டு?” 'ஆமாம், அது என் தேவதையின் கட்டளை, என் ஜிவேஸ்வரியின் ஞாபகச் சின்னம். நான் கொலை செய்த மேனியாளின் உயிர்ச்சிலை இது சுந்தரம்' என்றான். பெருமை, துக்கம், இரண்டும் மிதந்தன அவன் முகத்தில். 'அன்று, அரையும் குறையுமாகச் சொல்லி விட்டு ஓடினாயே கிட்டு, அதுவா? நிஜமாகவா கொன்று விட்டாய்? இன்றேனும் விளக்கமாக நான் அறியவேண்டும்' என்றேன் நான். அவன் ஆரம்பித்தான்: ‘'என் பிறந்த மண் இதுதான். என் பெற்றோர்கள்-என் வாழ்வைப் பாழாக்க என்றுதானோ என்னவோ-இந்தியாவுக்கு வந்து திருச்சியில் குடித்தனம் நிலைக்க வீடு கட்டிக்கொண்டு வாழ எண்ணினார்கள். அப்பொழுது எனக்கு வயது பத்து. எங்கள் வீட்டுக்கு அடுத்தாற்போல என் தகப்பனாரின் அத்தை வீடு. அவளுடைய பெண்-ராதாவுக்கு ஆறு வயது; பள்ளிக் கூட நேரம் போக பாக்கி நேரங்களில் நானும் ராதையும் செங்கற்களை கொண்டு வீடு கட்டி விளையாடுவோம். ராதை என்றால் என் உயிர் என்றுதான் பொருள். அவளே தான் அப்போது என் உலகமாகவும் தோன்றினாள். என் வாழ் வில் அதுதான் சுவைமிக்க பகுதி. பள்ளிப் படிப்பில் எவ்வளவு ஊக்கமும், உற்சாகமும் கொண்டு படித்தேனோ அவ்வளவு
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/58
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை