பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 ஊக்கமும் உற்சாகமும் எங்கள் நட்பில் கொண்டிருந்தேன். பெண்களுக்குரிய அடக்கம் பொறுமை, விவேகம் எல்லா வற்றிலும் ராதா சிறந்து காணப்பட்டாள். எங்கள் அன்பு நாளுக்கு நாள் வலுவடைந்து வந்தது. நான் மேல் படிப்புக்காக வெளியூர் புறப்படும்பொழுது, ராதா என்னைத் தனிமையில் சந்தித்து, நான் திரும்பிவர எவ்வளவு நாளாயினும் கன்னிகா விரதத்துடன் காத்திருக்கப் போவதாகக் கூறி விடைகொடுத்தாள். அதன்படியே, என் படிப்பு முடிந்து நான் மகிழ்வுடன் வீடு திரும்பி வந்த சமயம் எனக்காகப் பேரிடி போன்ற சம்பவம் காத்திருந்தது. என் ஜாதகமும் ராதையின் ஜாதகமும் பொருந்தவில்லையாம். வேறு வரனைத் தேடிக்கொண்டார்களாம். ஆனால் அந்த வரன் அவளைப் பாழ் செய்துவிட்டுப் போய் விட்டானாம்! இனி அவளைப் பார்க்கக்கூடாது என்று மறுநாளே அங்கிருந்து திரும்பி விட்டேன். இனிமேல் அவளைப் பார்க்கக்கூடாது என்ற தீவிர எண்ணம் நாளடைவில் எப்படியோ கொஞ்சம் தளர்ந்து கொடுத்தது. ஒரு மாத லீவு அதை நினைவூட்டி என்னை அனுப்பிவிட்டது. அவளைப் பார்க்கப் போனேன். முன்புற ஹாலில் புத்தகப் புதரின் நடுவில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தாள். தலை முடியாமல் கூந்தல் முதுகைப் போர்த்தி இருந்தது. கொஞ்சநேரம் நின்று பார்த்தேன். பிறகு பெயரைச் சொல்லிக் கூப்பிட்டேன். தலை நிமர்ந்து பார்த்தாள். 'வாருங்கள்' என்று தலையை முடிந்துகொண்டு எழுந்தாள். பழைய சம்பவத்தை அடியோடு மறந்து விட்டவள் போல ‘கலகல வென்று சந்தோஷமாக என்னுடன் உரையாடியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது! பேச்சு வாக்கில் 'நீங்கள் இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படி பிரமச்சாரியாக இருக்கப் போகிறீர்கள்?' என்று தரையைப் பார்ததுக் கொண்டு கேட்டாள். 'என்ன கேட்டாய் ராதை? கல்யாணமா? என்று நீ என்னை கைநழுவ விட்டாயோ, அன்றே நான் என் சுகத்திற்கும், சந்தோஷத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டேனே!” என்ற விஷ வார்த்தைகளைக் கொட்டினேன். கண்களில் நீர் பெருகும் என் முகத்தை மறுபுறம் திருப்பிக்கொண்டேன். தன்னை மறந்த