பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை வித்தன் எழுத்து பற்றி பேராசிரியர் 'கல்கி எழுதியுள்ள கருத்துகள் குறிப்பிடத்தக்கவை. உதாரணத்துக்குச் சில: 'விந்தன் கதைகளைப் படிப்பதென்றாலே எனக்கு எப்போதும் மனத்தில் பயம் உண்டாகும். படித்துவிட்டால் அன்று இரவு முழுவதும் தூக்கமில்லாமல் வருந்த நேரும். 'பாடுபட்டு அறியாதவன் பாட்டாளியின் துயரத்தைப் பற்றியும், சேற்றில் இறங்கி அறியாதவன் குடியானவனுடைய கஷ்டத்தைப் பற்றியும் என்னதான் கண்ணிரில் பேனாவைத் தோய்த்துக் கொண்டு எழுதினாலும், அந்தக் கதைகளில் மற்ற எல்லாச் சிறுகதை இலட் சணங்களும் இருக்கலாம்; உள்ளத்தை ஊடுருவித் தைக்கும்படியான இதயம் ஒன்றிய ஈடுபாடு இருப்பதில்லை. அப்படிப்பட்ட உண்மை ஒளிவீசும் சிறுகதைகளை எழுதுவதற்கு ஏழை எளியவர்களிடையே இருந்தும் உழைப்பாளி மக்களிடையே இருந்தும் ஆசிரியர்கள் தோன்றவேண்டும். அவர்களுடைய எழுத்தில் இலக்கியப் பண்பும் பொருந்தியிருக்க வேண்டும். 'மேற்கூரிய இல்டசணங்கள் பொருந்திய கதை ஆசிரியர்களில் ஒருவர் பூரீ.வி.கோவிந்தன், உழைப்பாளி மக்களிடையே பிறந்து வளர்ந்து உழைத்துப் பண்பட்டவர். ஏழை எளியவர்கள், தொழிலாளர்கள், பாட்டாளிகளின் சுக துக்கங்களை இதயம் ஒன்றி அனுபவித்து உணரும் ஆற்றல் பெற்றவர். 'அந்த உணர்ச்சிகளை உயிருள்ள தமிழ் நடையில் சித்தரித்து இலக்கியப் பண்பு வாய்ந்த சிறுகதைகள் பலவற்றை அவர் திறம்பட எழுதியிருக்கிறார்.' -