பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 நிலையில் ராதை அருகில் வந்து என் கண்களைத் துடைத்தாள். அதற்கு மேல் அங்கே இருப்பது அவளுக்குத் தீங்கு என்று தோன்றியது. எழுந்து ஓடிவந்து விட்டேன். நான் ராதையைச் சந்தித்த மறுவாரம் என் பெயருக்கு ஒரு கடிதம் வந்தது. 'அத்தான், என் இதயக் கோயிலில் குடிக் கொண்டிருக்கும் ஒரே இஸ்டதெய்வம் நீங்கள்தான் என்பதை நீங்கம் அறியவே மாட்டீர்களா? விதி நம்மைப் பிரித்த வேதனையை, என்மீது அன்று கொட்டி விட்டீர்கள்.... வேதனை தான் இனி என்னுடைய முடிவா?.... உங்களுடைய ராதையாகவே நான் வாழ கனவு கண்டேன். முடியவில்லை. ஆனால் இன்று உங்களுடையவளாகவே உங்கள் நிழலை விட்டுப் பிரிகிறேன். இந்தக் கடிதம் உங்கள் கை சேரும்போது, எனக்கும் ஒரு 'நல்ல முடிவு கிட்டிவிடும்... ஒரு வேண்டு கோள்...! என் மீது உங்கட்குக் கருனையிருந்தால், என் நினை வுக்கு ஓர் அடையாளமாக எல்லோருக்கும் பயன்படும்படி ஏதாவ தொன்றைச் செய்யுங்கள் என்று உங்களைப் பிரார்த்திக்கிறேன். இப்படிக்கு, ராதை' என்றிருந்தது. இந்தக் கடிதம் கிடைத்த ஒருமணி நேரத்திற்குள் அவளுடைய மரணச் செய்தி தந்தி மூலம் கிடைத்தது. பிறகு மூன்று மர்தம் ஊர் ஊராகச் சுற்றினேன். கடைசியில் இங்கு வந்துவிட்டேன். என் மனமோகினியின் கட்டளைப்படி அவள் வேண்டுகோளைச் செய்து முடித்துவிட்டேன். எல்லோருக்கும் பயன்படுவது என்ன? வாசகசாலையினால் எவ்வளவு பேர் அறிவு வளர்ச்சி பெறலாம்! கட்டடமும், புத்தகங்களும் இருபதாயிரம் ரூபாய் பெறுமானமாகின்றன. ஷாஜஹான் தாஜ்மஹல் கட்டினான், எல்லாரும் பார்த்து ரசிக்க. இந்த வாசகசாலை எவ்வளவு மக்களுககு அறிவின் பொக்கிஷமாக விளங்குகிறது! இதுதான் எங்கள் காதல் மாளிகை. இதுவேதான் என்னுடைய காதலின் - இழந்த காதலின் கதை. ராதையின் நினைவுச் சின்னம் இது... அவள் ஆத்மா சாந்தி பெறுமல்லவா, சுந்தரம்......! நான் மட்டும்