பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 அத்துடனாவது நின்றாயா? - அதுதான் இல்லை. எனக்கு நீ ஒருத்திதான் ஒரே ஒரு பாசக் கயிறாக இருப்பதாகவும், நான் மனம் வைத்தால் வெகு சுலபமாக அதை அறுத்தெறிந்துவிட்டோ, உதறித் தள்ளிவிட்டோ ஒடிப்போய் விடலாமென்றும் ஞானோப தேசம் வேறு செய்திருக்கிறாய்! ஆஹா, என்ன விந்தை! என்ன புதிர்!! மலர் விழியே! கொஞ்சம் யோசித்துப் பார்! சற்றே சிந்தித்துப் பார்! உன் பாசக்கயிற்றை நான் அறுத்தெறிந்து விட்டால், உன் நினைவு முகத்தை என் நெஞ்சிலிருந்து நான் அகற்றி விட்டால், உன் காதல் மலரை என் அகத்திலிருந்து நான் கிள்ளி எறிந்துவிட்டால் அதற்கப்புறம் நான் ஏது? எனக்கு வாழ உலகம் ஏது? என்னைக் காப்பாற்றக் கடவுள் தான் ஏது, ஏது, ஏது? - சொல்லு லுவினா, சொல்லு? ஊசலாடும் உயிரே! சொல்லப் போனால் உன்னைப் பிணைத்திருக்கும் அந்த ஆறு பாசக் கயிறுகளும் சல்லி வேர்கள். அவற்றை நீ களைந்து எறிந்து விட்டால் மரம் பட்டுவிடாது; விழுந்தும் விடாது. அதற்குப் பதிலாகத் துளிர்த்துத் தழைத்து வளரும்; வாழும். ஆனால் ஆணி வேரைக் களைந்து விட்டால் வீழும்; சாகும். அதே மாதிரி எனக்கிருப்பது ஒரே வேராயிருந்தாலும் அது ஆணிவேர், அன்பு வேர், ஆசை வேர். அதை நீ களைந்துவிட்டால்... ஐயோ, அதன் பயங்கரத்தை நினைக்கும் போதே என் உள்ளொளி மங்குகிறது; சாவின் நிழல் என்னைத் தொடர்கிறது. காதல் கீதமே! அதோடாவது விட்டாயா? - "மறந்துவிடுங்கள், பிரிந்து விடுங்கள்!' என்ற விஷவார்த்தைகளை வேறு கக்கியிருக் கிறாய். என்ன ஆச்சரியம்! - துரத்தில் இருக்கும்போது 'ஆருயிர் அன்பனே!' என்று அழைப்பது, கிட்ட நெருங்கினால் "மறந்து விடுங்கள், பிரிந்து விடுங்கள்!” என்று அனாயாசமாகச் சொல்லி விட்டு, என் பதிலைக்கூட எதிர் பார்க்காமல் முடிவு கட்டுவது என்றால் என்ன அர்த்தம்? அல்லது, என்ன அனர்த்தம்?