62 இதனால் ஒன்று மட்டும் எனக்குத் தெரிகிறது; புரிகிறது. அதாவது, உன் உள்ளத்தால் இதுவரை நான் ஏற்கப்பட வில்லை; உதட்டால் ஏற்கப்பட்டவனாக இருந்திருக்கிறேன் என்பதுதான் அது! ஆனால், உன்னை நான் ஏற்றது உதட்டால் அல்ல; உள்ளத்தால் - என்று எப்பொழுது, எந்த நேரத்தில் கண்கள் கலந்து, இதயங்கள் நிறைந்து, உயிர்கள் ஒன்றியதோ அன்றே, அப்பொழுதே, அந்த நேரத்திலேயே வான் இடிந்து தலையில் விழுந்தாலும், பூமி பிளந்து அதில் நாம் புதைக்கப்பட்டாலும், சூரிய சந்திரர் எரிந்து உலகமே இருண்டு விட்டாலும், 'மறந்து விடுங்கள், பிரிந்து விடுங்கள்!' என்ற அவச் சொற்கள் எழவே கூடாது. அப்படி எழுந்தால் அதில் உறவு இல்லை: உண்மை இல்லை; உள்ளொளி இல்லை; உயிரோட்டம் கூட இல்லை என்று தான் அர்த்தம்! அப்படித்தான் இந்தப் பைத்தியம் உன்னை என்ன கேட்கிறது? - அவன் கேட்பதெல்லாம் உன் உளம் கனிந்த அன்பு. அதுவும் ஏன் தெரியுமா? - உன் அன்பில் கனிவு இருக்கிறது; கனிவில் இனிமை இருக்கிறது; அந்த இனிமையில் மென்மை இருக்கிறது என்பதால்தான்! - நீ என்றும் அவன் அரவணைப்பில் இருக்க வேண்டும்; உன் அமுத வார்த்தைகள் அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும்; இருவரும் கை கோர்த்துக்கொண்டு வெண் முகில்களின் மேல் மிதந்து செல்ல வேண்டும்; வான்குயில்கள் கூவும் மலர்ச்சோலை களிலே எதிரும் புதிருமாக உட்கார்ந்து ஒருவரை யொருவர் விழி வழியாகப் பார்க்க வேண்டும். அவன் உன்னைக் கிள்ள வேண்டும்; நீ துள்ள வேண்டும். அவன் அடிக்க வேண்டும்; நீ கடிக்க வேண்டும். கண் சிவக்க, கன்னஞ் சிவக்க நீ அழவேண்டும்; அகம் விரிய முகம் மலர அவன் சிரிக்க வேண்டும். நீ ஊடல் கொள்ள வேண்டும்; அவன் கூடல் கொள்ள வேண்டும் - இது தான் இந்தப் பைத்தியம் எதிர் நோக்குவதெல்லாம் என்ன, புரிந்ததா? பேசும் விழியே! தப்பித் தவறி உன்னை நான் மறக்க முயன்றாலும் உன் இனிய நினைவு என்னை ஆட்டி அலைக் கழிக்கிறது; உனது
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/64
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை