63 ஒவ்வொரு அங்க அசைவும், அசைவின் நெளிவும் என்னை வாட்டி வதக்கிப் பொசுக்கி விடுகிறது. வட்ட வடிவமான உன் வண்ண விழிகள், அந்த விழிக்கரையில் மோதி மோதி மீளும் காதல் அலைகள், கனிந்த கன்னத்தின் கதுப்பு, அந்தக் கதுப்புக்களில் லேசாகத் தவழும் இளஞ் சிவப்பு, சற்றே அவிழ்ந்திருக்கும் இதழ்கள், அந்த இதழ் களிலே நெளிந்தோடும் முறுவல், கலீரென்று சிரிக்கும் பொழுது விண்ணொளி வீசும் வெண் பற்கள், அந்த விண்னொளியிலே தெரியும் உன் முகவாயின் சிறு குழி! - ஐயோ, அந்தச் சிறுகுழியின் சுழிவில்தான் எத்தனை சிருங்கார ரஸங்கள்! எப்படிப் பட்ட லீலா விநோதங்கள்! உலகத்தின் அழிவைக் காக்கும் மனித உற்பத்தியின் ஆரம்பம் அங்கே தான் உதயமாகிறது, லுவினா! என் ஜீவ ஒளி அங்கே தான் மயங்கி முயங்கி, தட்டுத் தடுமாறித் தளர் நடை போடுகிறது, லுவினா - அப்படி இருக்கும்பொழுது உன்னை நான் மறக்க முடியுமா? இல்லை, துறக்கத்தான் முடியுமா? - சொல்லு லுவினா, சொல்லு? பனிமலரே! உனக்குத் தெரியாமல் உன் தவழ் நடையில் ஒருவித 'டெலிபோன் இருக்கிறது. நீ சற்றுத் துரத்தில் வரும்பொழுதே அது என் காதுகளில், 'ட்ரிங்ங்... ட்ரிங்ங்... ஹல்லோ, மிஸ் லுவினா ஈஸ் கமிங்! மிஸ் லுவினா டார்லிங் ஈஸ் கமிங்!’ என்று கிணுகினு வென்று ஓயாமல் ஒலிக்கும். அடுத்த கூடிணம் என் எண்ணம், 'என்ன, லுவினா தேவியா? இந்த நேரத்திலா?' என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, என் இதயம் "ஆமாம், லுவினா தேவியேதான்! எழுங்கள்; தொழுங்கள்!' என்று ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் என் கண்ணின் இமைக் கதவுகளைத் தட்டும். ஆனால் தூங்குமூஞ்சிக் கண்களோ, 'என்னாங்க பிரதர், யார் வந்தாலும் யார் போனாலும் 'லுவினா, லுவினா!'ன்னு சொல்லி என் துக்கத்தைக் கெடுக்கிறீங்களே! என்று பிதற்றிக் கொண்டே மற்றொரு பக்கம் திரும்பிப் படுப்பதற்குள், இனிக்கும் உன் பாதங்களின் மெல்லொலி என்னை நெருங்கும். அடுத்த வினாடி விழிகள் தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு எழுந்து, 'ஐயோ, வருவது நம் காதல் மோகினி லுவினா தேவியேதான்!” என்று ஒரு "சலூட் அடிக்கும். அந்தச் சமயத்தில் விஷமப்
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/65
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை