பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பார்வை விழி யோரங்களில் சொட்ட, குளிர் நகை இதழ் ஒரங்களில் சிந்த, நடை குலுங்க இடை துவள, மெல்ல மிதந்து நீ என்னைக் கடந்து சென்று விடுவாய். ஏமாற்றமடைந்த என் இதழ்கள் 'லுவினா, என் அன்பே' என்று ஈனஸ்வரத்தில் முணுமுணுக்கும். பெண்மையின் சிகரமே! இதெல்லாம் எவ்வளவு நேரம் என்று நினைக்கிறாய்? ஒரே வினாடி! ஆம், ஒரே வினாடிதான்! என்ன, நான் சொல்வ தெல்லாம் உனக்குப் புதிராகத் தோன்றுகிறதா? புதிரல்ல லுவினா, புதிரல்ல; இதுதான் தெய்விகக் காதலின் புனிதத் தன்மை - தெரிந்ததா? காதல் தெய்வமே! அன்றொரு நாள் இரவு கண்களை மூடியவாறே விழிப்பும் து.ாக்கமும் கலந்த ஒருவித நிலையில் நான் ஆழ்ந்திருந்தேன். எங்கும் கரிய இருள் கவிந்து குவிந்திருந்தது. அந்தச் சமயத்தில் பொன்னிறமான ஜாக்கெட்டும், ஆரஞ்சு வர்ணப் புடவையும், அவிழ்ந்து புரளும் கூந்தலில் இரண்டு இலையுடன் கூடிய சிவப்பு ரோஜாவும் அணிந்த ஓர் உருவம் என்னை நோக்கி வந்தது. கிட்ட நெருங்கியதும் குனிந்து என் கண்கள் இரண்டையும் கவனித்தது. பேசாமல் நான் படுத்திருந்தேன். தன் துளிர் விரல்களால் அது என் கண்ணிமைகளை லேசாகத் தடவி, கமல்!" என்று கொஞ்சும் குரலில் அழைத்தது. நான் மெளனம் சாதித்தேன். 'என்ன மிஸ்டர் கமல்! தூங்குகிறீர்களா? - நல்லாத தூங்குங்கோ; நான் வரேன்!' என்று ஒரடி எடுத்து வைத்தது. அப்போதும் நான் சும்மா இருந்தேன். கலையாத என் மெளனத்தைக் கண்டதும் கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது அதற்கு. இதோ.பார், கமல்! இப்போ நீ பேசலேன்னா நான் போயே போய் விடுவேன். அப்புறம் காலடியில் விழுந்து கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டாலும் உன்னிடம் நான் பேச மாட்டேன் - ஆமாம், அப்படித்தான்!' என்று சொல்லி விட்டுச் சட்டென்று திரும்பியது. மறுபடியும் ஏதோ நினைத்துக் கொண்டது போல் கலீரென்று சிரித்தபடி ஓடோடியும் வந்து என் மேல் விழுந்து, கமல், கமல்! இதைக் கேட்டீங்களா?' என்று என் முகத்தை இப்படியும் அப்படியுமாக