பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இத்தகு புகழ் வாய்ந்த விந்தன் சொந்தமாக 'மனிதன்' என்ற பெயரில் இதழ் ஒன்றை நடத்தினார். 'மனிதன்' பத்து இதழ்களே வெளிவந்தன. ஒவ்வொரு இதழிலும் விந்தனின் பத்திரிகை உலக அனுபவங்களையும் அவரின் சுதந்திரமான சிந்தனைகளையும் காணலாம். மனிதனில் வெளிவந்த கதை, கட்டுரை, கவிதைகள் அனைத்தும் இலக்கியத் தரமானவை; இந்தத் தலைமுறை வாசகர்களுக்கு பெரு விருந்தாகும். 'மனிதன் இதழில் தமிழகத்தின் தலை சிறந்த எழுத்தாளர்களான டாக்டர் மு.வரதராசன், அறிஞர்கள் அப்பாதுரை, நாரணதுரைக் கண்ணன், பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை, கவிஞர் தமிழ் ஒளி, ஜெயகாந்தன் பி.எஸ். ராமையா, சபரிராஜன், பூவை, ஆறுமுகம், சுந்தர ராமசாமி போன்றவர்கள் தமது எழுத்துக்களால் 'மனிதனின் புகழை ஓங்கச் செய்தார்கள். நாற்பதாண்டுகளுக்கு முன் 'மனிதன்' பத்திரிகையில் வெளிவந்த படைப்புகளின் இலக்கியத்தரமும் தன்மைகளும், இன்றைய வாசகர்களுக்கும் ஏற்புடையதாகவும் சுவைத்து பண்பும் பயனும் பெறத்தக்கதாகவும் இருக்கும் என்கிற எதிர்பார்ப்புடன் மனிதனில் வெளிவந்த அரிய படைப்புகளை தொகுத்துத் தந்துள்ளேன். இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள விந்தனின் தெருவிளக்கு', சினிமா உலகின் சீரழிவை நகைச்சுவையுடன் சித்தரித்து காட்டுகிறது. என் முயற்சிக்கு வெற்றிகிட்டும் வகையில் 'மனிதன்' இதழ் தொகுப்பு நூலை சிறப்பான முறையில் வெளியிட்டு, விந்தனின் புகழுக்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளனர் கலைஞன் பதிப்பகத்தார். பதிப்பாளரும் எழுச்சி மிக்க இளைஞருமான எம்.நந்தன் அவர்களுக்கும், இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள - படைப்புகளின் ஆசிரியர்களுக்கும், விந்தன் குடும்பத்தாருக்கும் மனமார்ந்த நன்றியும் பாராட்டும். தோழமையுடன் மு. பரமசிவம்