பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 தலை குனிய வேண்டும். நீ கண்ணே!' என் முனக வேண்டும்; அவள் 'கண்ணின் மணியே!' என உருக வேண்டும். அதற்குப் பின் நிலவும் மோன நிலையிலே உன் கைகள் அவள் கன்னத்தை மெல்ல வருட வேண்டும்; அதனால் ஏற்பட்ட உணர்ச்சி அவள் வெட்கத்தை விரட்ட வேண்டும். ஒருவர் முகத்தை ஒருவர் நெருங்க வேண்டும்; இரு முகமும் ஒன்றாக இணைய வேண்டும். அந்த இன்பப் போதையிலே உன்னை நீ மறக்க வேண்டும்; என்னை நான் மறக்க வேண்டும்! - இவ்வளவு ஆசைகள் நெஞ்சில் இருந்தும் உன்னை அடைய நான் ஏன் அஞ்சுகிறேன், தெரியுமா? - அவை நிலைக்காமல் போய் விடுமே என்பதால்தான்! இன்று நாம் எல்லாவற்றையும் உதறிவிட்டு இன்பபுரிக்குப் புறப்பட்டு விடலாம். ஆனால் நம் வாழ்வு அங்கே என்றும் செழிக்குமா? நாம் காணும் இன்பம் அங்கே எப்பொழுதும் நிலைக்குமா? - கனவில் வந்து மறைவது போல நம் காதலும் மறைவதை விட, அதைச் சுவைக்காமலே இருந்துவிடுவது மேல்தானே!- அதை விட்டுச் சமுதாயச் சட்ட திட்டங்களை மீறி நாம் இருவரும் மணம் செய்து கொண்டால் வாழ்க்கை புயலாக மாறும், ஜாதிக் கட்டுப்பாடு அனலைக் கக்கும்; இன்பத்திற்காகத் தோன்றிய காதல் துன்பத்தின் சிகரத்தை அடைந்து துள் தூளாகச் சிதறிவிடும்! பார்க்கப்போனால், பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை! அந்த உலகிலோ நீயும், நானும் ஏழைகளாகப் பிறந்திருக்கிறோம். நமக்கு வாழத்தான் உரிமையில்லை யென்றால், சாகக்கூட உரிமையில்லையே! இந்த நிலையிலே பெற்றோரைக் கைவிட்டு உன் கையைப் பிடித்தால் நீ என்னிடம் என்ன சுகத்தைக் காணப்போகிறாய்? வேதனைக்கென்றே பிறந்த பெண் ஜென்மம் நான், என்ன கஷ்டம் வந்தாலும் தாங்கிக் கொள்வேன். ஆனால் நீ? - உன் லுவினாவிற்காக, உன் லுவினாவின் சந்தோஷத்திற்காக ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைப்பாய்; உள்ளம் ஊசலாடும் பொருளுக்காக! அப்போது நான் வேண்டாம் என்றாலும் நீ கேட்பாயா? - உன் அன்புக்கிளியின் இன்ப வாழ்விற்காகப் பொருள் தேட முயல்வாய்! - அதனால் என்ன பிரயோசனம்? -