71 இரண்டிலிருந்தும் நாம் மீளவேண்டுமா? இல்லை, மாளத்தான் வேண்டுமா? உள்ளத்தின் எதிரொலியே! கடைசியாக ஒன்று! - பெற்றோரின் இதயத்தைச் சுக்கு நூறாக உடைத்தெறிந்துவிட்டு நான் உன்னிடம் வரத்தான் வேண்டும் என்று நீ இன்னும் கருதினால், ஜாதிமதம் என்ற பயங்கரப் புயலில் சிக்கும்போது நாம் அழிந்தாலும் பரவாயில்லை என்று நீ இன்னும் எண்ணினால், ஏழ்மையில் வாடி எதிர்காலத்தில் நீ புலம்பும்போது உன் லுவினாவும் உன்னுடன் சேர்ந்து கதறுவதை நீ இன்னும் ஆதரித்தால், அருவருக்கத் தக்க ஜந்துக்களைப் புறக் கணிப்பதுபோலச் சமூகம் நம்மைப் புறக்கணிப்பதைக் கண்டு நாம் மனம் புழுங்கி வாழத்தான் வேண்டும் என்று நீ இன்னும் விரும்பினால் இப்போதே உன்னிடம் நான் ஒடி வந்துவிடுகிறேன்; அன்றுபோல் இன்றும் உன் கைகளைப் பற்றி என் கண்களில் ஒற்றிக் கொள்கிறேன் - இல்லா விட்டால், ஐயோ கமல்!" என்று அனுதாபம் தெரிவிப்பதைத் தவிர என்னால் வேறு என்ன சொல்ல முடியும்? - லுவினா. - நவம்பர், 1954
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/73
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை