பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 'நடுத்தர வர்க்கம்' என்று இன்று சொல்லப்படும் அந்தக் கூட்டத்திலே தேர்ந்த கல்வி மான்கள் உண்டு - ஆனால் புத்தி சாலிகள் பஞ்சம். அப்படியே அதில் புத்திசாலிகள் தோன்றி னாலும், அதனுடைய அசட்டுத் தனத்தைப் போக்க அவர்கள் சபதமேற்கிறார்கள்; அதன் நாசகார சக்திகளை அடித்து நொறுக்க முஷ்டிகளை முறுக்கேற்றி உயர்த்துகிறார்கள். அப்படி உயர்த்தும் போது அந்தக் கணமே அவர்கள் அந்த வர்க்கத்திலிருந்து பிரிந்து விடுகிறார்கள்; அதன் உறவினின்றும் விலகி விடுகிறார்கள்; அதனுடைய 'காதல் பார்வை' யிலிருந்து தப்பி விடுகிறார்கள். அத்தகைய 'ஆத்மாக்'களில் ஒன்றான நீங்களோ அதனுடன் ஒட்டி, ஊசலாடும் பிறவி! உங்களுடைய முடிவுப்படி, நீங்கள் கமலுடன் சேர்ந்து வாழ வேண்டுமானால் அவர் எப்படிப் பட்டவராக இருக்க வேண்டும், தெரியுமா? - பணக்காரராக இருக்கவேண்டும். அந்தப் பணக்காரத் தன்மையின் சின்னங்களான பங்களா, கார் ஆகியவை இருக்கவேண்டும் - அவற்றைக் கொண்டு அவர் 'பட்ட மகிஷ'ராக மாறினால், நீங்கள் பட்ட மகிஷி'யாக மாறி, அவருக்குப் பக்கத்தில் இருந்து நாளெல்லாம் கொஞ்சிக் கொண்டிருப்பீர்கள்! அது மட்டுமா? - கடற்கரையிலே, நிலா முற்றத்திலே, படுக்கையறைக் கட்டிலிலே, பங்களாவின் 'கார்ட'னிலே, வராந்தாவிலுள்ள 'குவடின் சோபா'விலே உங்கள் கமல் உங்களை அனைத்து, முகத்தோடு முகம் இணைத்து, உணர்ச்சிக் கரகரப்புடன் 'கண்ணே! என வேண்டும்; நீங்கள் 'கண்ணின் மணியே!' என வேண்டும் - அதரங்கள் ரகசியம் பேச, அந்தப் போதையிலே நீங்கள் தலை கிறங்கி உங்களை மறப்பதோடு உங்கள் 'தத்துவத்தையும் மறக்க வேண்டும் - ஏன் அப்படித் தானே?- அதற்குக் காதலிதான் வேண்டுமா, என்ன? எத்தனையோ விலைமாதர்கள் தயாராயிருப்பார்களே! உயிரற்ற உணர்ச்சியே! உங்களைப் போன்றவர்களின் லட்சியம் காதலுக்காக எத்தகைய தியாகமும் செய்வது, எதையும் சகித்துக்கொண்டு இடையே உள்ள குருட்டுச் சமூகத்துடன் போராடி வாழ்வது, அல்லது சாவது என்ற லட்சியமா? - அல்லவே அல்ல - பின் என்ன?