74 சமுதாயக் கோணல்களுக்குக் குனிந்து கொடுப்பது: போலித்தனத்திற்கு, வெளிப்பகட்டிற்கு வளைந்து கொடுப்பது ஜார்ஜெட் சேலைக்கு முகமன் கூறுவது; லினன் ஜாக்கெட்டுக்குக் கை கொடுப்பது; லிப் ஸ்டிக்குக்குப் பல்லை இளித்துப் படு புத்தி சாலித்தனமாக நடந்து கொள்வது-இதுவே உங்கள் லட்சியமா கவும், இதுவே உங்கள் நடைமுறை வாழ்க்கையாகவும் இருப்பதனால்தான் உங்களை மட்டுமே தன் வாழ்வில் ஜீவனாக எண்ணியிருந்தவருக்கு 'என்னை மறந்து விடு, என்னைப் பிரிந்து விடு!’ என்று நீங்கள் எழுதத் துணிந்தீர்கள்! ஏன் தெரியுமா?-உண்மையைப் பார்க்கமுடியாத உங்கள் கண்களுக்கு அவர் பலவீனராகத் தோன்றுகிறார்: பைத்தியக்கார ராகத் தோன்றுகிறார்; எதிர்காலத்தைப் பற்றி எண்ண முடியாத ஏழையாகத் தோன்றுகிறார்; ஏதும் அறியாத ஏமாளியாகத் தோன்றுகிறார். உண்மை; தனக்குள் பொங்கி எழுந்த புனிதமான உணர்ச்சி வெள்ளத்தை, காதல் எனும் ஜீவ மதுவைப் பாலைவனத்தில் பொழிந்த பால் நிலவாக்கிய அவர் பலவீனர்தான்; பைத்தியக் காரர்தான்; ஏழைதான்; ஏமாளிதான்! ஆனால், அவரிடம் ஆறு பாசக் கயிறுகளைபந் பற்றி நீங்கள் சொல்பவை யனைத்தும் வெறும் புரட்டு. அவை உங்கள் கோழைத்தனத்தைப் பிரதிபலிப்பவை; சரித்திரத்தைக் கேலி செய்பவை. லைலாவும் காயஸ் ம்ை, அனார்கலியும் சலிமும், மார்க்ஸ் ம்ை ஜென்னியும் பைத்தியக்காரர்களா? விவேகம் அற்றவர்களா? உங்களுக்கிருக்கும் புத்தி அவர்களுக்கு இல்லையா? ஈராக் மன்னனின் பட்ட மகிஷியாகிவிட்ட லைலா, தன் காயலைப் பைத்தியக்காரனாக பிச்சைக்காரனாகப் பார்க்கிறாள். அப்பொழுதும் அவளால் 'பைத்தியக்காரன்' என்னும் பொருள் கொண்ட மஜ்னு!’ என்ற பெயரால் அவனை அழைக்க முடிய வில்லை; காயஸ்! ஐயோ, காயஸ்!' என்று அழைத்த படி அவனைத் தாவி அணைக்க ஓடுகிறாள்; "நானும் உன் னுடன் வந்துவிடுகிறேன்; இருவரும் ஊரெல்லாம் சுற்றித் திரிந்துப் பிச்சையெடுத்தாவது உயிர் வாழ்வோம்!' என்று கதறுகிறாள்.
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/76
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை