பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 அனார்கலியையும் சலீமையும் அன்று சாம்ராஜ்யம் முழுவதுமே எதிர்த்து நின்றது. அதனால் அவர்கள் அழிந்தாலும் அவர்களுடைய காதல் இன்றுவரை அழிந்ததா?-இல்லை. காதலுக்கு முன்னால் - ஏன் உயரிய லட்சியம் எதுவாயிருந்தாலும் அதற்கு முன்னால் - அதை எதிர்த்த சக்திகள் ஏதாவது, எந்தக் காலத்திலாவது வென்றதுண்டா? இல்லை, வெற்றிதான் கண்ட துண்டா? - இல்லை, இல்லவே இல்லை. ஏதாவது ஒரு லட்சியத்தை ஏற்றுக்கொண்டிருபவர்கள், தங்களைப் பிணித்திருக்கும் தளைகளை அறுத்துக் கொள்வதையே எப்பொழுதும் விரும்புகிறார்கள்; அதற்காகச் சந்தர்ப்பத்தை எதிர் நோக்கித் துடிக்கிறார்கள்; அவற்றை அறுத்தெறியும் பணியிலே தங்கள் உயிரையும் விடுவது என்று உறுதி கொள்கிறார்கள்-அதுவே அவர்களுடைய 'முதல் லட்சிய'மாகி விடுகிறது! உங்களைப் போன்ற புத்திசாலி'களுக்கு அவர்கள் இன்று 'மடையர்களாகத் தோன்றலாம். ஆனால் நாளைய உலகத்துக்கு அவர்கள்தாம் உண்மையான ரக்ஷகர்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது. பார்க்கப்போனால் கண்ணிர் விடவும் கெஞ்சவும் அம்மா வக்கும் அப்பாவுக்கும் மட்டும்தானா தெரியும்? உங்களுக்குத் தெரியாதா? அதே ஆயுதங்களை உபயோகித்து அவர்களைச் செயலற்றவர்களாக்க உங்களால் முடியாதா? உணர்ச்சியில்லா உள்ளமே! கடமையைப் பற்றிப் புலம்பும் உங்களுக்குக் காதலும் ஒரு கடமைதான் என்று தெரியவில்லையா? அந்தக் கடமை தன்னையும் தன் உள்ளத்தையும் கவர்ந்தவனை மணந்து, அவன் வாழ்வை மலர வைக்க வேண்டியதுதான் என்பதை நீங்கள் இன்னும் உணரவில்லையா? எப்படி உணர முடியும்?- அவர்தான் எழுத்தாளராயிற்றே! ஏழையாயிற்றே!-காதலர் என்ற முறையில் அவரால் உங்களுக்குத் தோழராகத்தான் இருக்க முடியும்; நாகரிகக் கோமான்களைப் போல எஜமானர்களாகவோ, அல்லது வேலைக்காரர்களாகவோ இருக்க முடியுமா?