பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 சாஸ்திரம் அதன் அடி முடியைக் கண்டறிந்து உலகுக்கு அளித்த மகா மேதை கார்ல் மார்க்ஸ். அவனை மணந்த ஜென்னி, பிரபு வம்சத்தைச் சேர்ந்தவள்; பிரஷ்ய மந்திரியான வெஸ்ட்பால்னின் சகோதரி. அந்த அம்மையார் காரை, பங்களாவை, நிலையான இன்பத்தை, வளமான வாழ்க்கையை நம்பியா கார்ல் மார்க்ஸ்-டன் வந்தார்கள்?-இல்லை; பின் எதை நம்பி வந்தார்கள்? - அவனுடைய அறிவையும், ஆற்றலையும் நம்பி வந்தார்கள். அதனால்தான் தங்கள் காதலை எதிர்த்து நின்ற சமூகக் கொடுமைகளையெல்லாம் அவர்கள் அன்பென்னும் ஒரே ஆயுதத்தால் அடித்து நொறுக்கி வாழ்ந்தார்கள். ஒன்று பட்ட பின் வேண்டுமானால், 'இருவரும் ஒன்றாகி விட்டோமே, இனிமேல் எப்படி வாழ்க்கை நடத்துவது?' என்ப தைப் பற்றிப் பொருளாதார ரீதியில் கணவனும் மனைவியும் பேச லாம்; யோசிக்கலாம். ஒன்றுபடுவதற்கு முன்னரே, 'உன்னை நம்பி நான் வரலாமா? வந்தால் உன்னுடைய பொருளாதாரம் அதற்கு இடங் கொடுக்குமா?’ என்றெல்லாம் எந்தப் புனிதமான பெண்ணும் கேட்க மாட்டாள்; கேட்கக் கூடாது! அது போகட்டும்-உங்களுக்கு எப்பொழுது அம்மா, ஆன்ம விசாரம் வந்தது?- கடிதத்தின் முற்பகுதியில் காதல் லீலைகளை வர்ணித்துத் தள்ளிவிட்டு, அதற்காக ஏங்குவதாகவும் கூறிவிட்டுப் பிற்பகுதியில் மட்டும் பிரும்ம ஞானம் பேசுவானேன்? சரி, அந்தத் தத்துவப்படியே உங்கள் பிரச்சனையைப் பார்ப்போம்: சடலம் அநித்யமானது; கேவலமானது. ஆன்மா புனித மானது; நித்யமானது. அப்படியானால் சமூகத்தின் மூடக் கட்டுப்பாடுகளை உடைக்க நடத்தும் வீரப் போரில் உங்கள் அநித்திய சடலம் அழியட்டுமே! தனித்து இயங்கும் உங்கள் ஆத்மாக்கள் காதல் உலகில் சங்கமமாகட்டுமே! அதற்கு நீங்கள் தயாரா? - சொல்லுங்கள் லுவினா, சொல்லுங்கள்?-காதல்கூடப் பணக்காரனுக்குத்தானா சொந்தம்? ஏழைக்குக் கிடையாதா? -தோழன். டிசம்பர் 1954