காலத்தின் துதரே! ஆலாலசுந்தரம் கமல் எனக்கு எழுதிய 'காதல் கீத'த்தையும் பதிலுக்கு நான் வரைந்த 'சோக கீதத்தையும் படித்தபின், 'காலத்தின் துத' ராகத் தோன்றித் தாங்கள் எனக்கு எழுதிய கடிதம் படிக்கக் கசந்தது; ஆனால் சிந்தித்துப் பார்க்க இனித்தது. உடல் நோய் காணும்போது மருத்துவர் தரும் மருந்து கசக்கிறது; ஆனால் நோயைப் போக்குகிறது. அது போலவே நான் அறிவு நோய் கொண்ட போது அறிவுரை அளித்தீர்கள்; அது புறச்சுவைக்குக் கசந்த போதிலும் அகச்சுவைக்கு அமுதமாய் இனித்தது-அதனால் என் நோயும் குணமாயிற்று. 'மேல் வர்க்கத்திற்கு உரித்தான ஒரு தொத்து நோய்' என்று நான் கமலுக்கு எழுதியிருந்த கடிதத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந் தீர்கள் - ஆம், அது ஒரு தொத்து நோய்தான்! ஆனால் ஒரு சிறு திருத்தம்; என்னைப் பொறுத்தவரை உங்களது குற்றச்சாட்டு பொருந்தாது என்று கூற நான் ஆசைப்படுகிறேன். நீங்கள் எழுதியிருப்பதைப் போலச் சுரண்டலின் சின்னங் களாக வானத்தை நோக்கி உயர்ந்திருக்கும் பங்களாக்களுக்கோ, சுற்றுப்புற நிலைகளைக் காணாமல் காற்றினுங் கடிது செல்லும் கார்களுக்கோ, அல்லது குஷ்டரோகியின் ரணங்களிலிருந்து வடியும் சிவந்த ரத்தத்தை ஒத்த "லிப்ஸ்டிக் குக்கோ,மானத்தைப் போற்றாமல் பிறர் மனத்தைத் துளைக்க உதவும் ஜார்ஜெட்டு களுக்கோ, அல்லது வேறுவிதமான போலித்தனத்திற்கோ வெளிப் பகட்டிற்கோ நான் ஆளாகிவிடவில்லை. மானத்தையும் மரியாதை யையும் நடுத்தெருவில் அதுவும் நட்ட நடுப் பகலில் விலை கூறும் 'அமெரிக்க ஹாலிவுட் நாகரிகத்தை நான் முழு மூச்சோடு எதிர்ப்பவள். இல்லாவிட்டால், கமல் ஏழை எழுத்தாளராயிருந்தும் அவரை நான் ஏன் காதலித்தேன்? புயலையும் அழிவையும், துாற்றலையும் துன்பத்தையும், அவமதிப்பையும் அருவருப்பை யையும் பொருட்படுத்தாமல் வாழத்தான் வேண்டுமென்றால், நான் இந்தக் கணமே உங்களுடன் ஒடி வந்து விடுகிறேன் என்று நான் ஏன் அவருக்கு எழுதினேன்?-சிந்தித்துப் பாருங்கள் தோழரே, சிந்தித்துப் பாருங்கள்!
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/80
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை