79 அருமை அண்ணா! என்னை உணர்ச்சியின் எஜமானி என்று குறிப்பிட்டிருக் கிறீர்கள். என் உள்ளம் அன்று துடித்த துடிப்பைத் தாங்கள் துளியேனும் உணர்ந்திருந்தால் அவ்வாறு குறிப்பிட்டிருக்கவே மாட்டீர்கள். என் ஆசைக் கமலைத் தவிர வேறு யாரையும் மணக்க மாட்டேன் என்று நான் கண்ணிர் வடித்துக் கதறினேன்; ஒரு கவளம் சோறுகூடச் சாப்பிட மனமில்லாமல் இரண்டு நாட்களைக் கழித்தேன்; அப்பா இல்லாத சமயம் பார்த்து அம்மாவிடம் அழுது புரண்டேன்- பெற்ற மனம்கூடக் கல்லாகவே இருந்தது. அம்மா இல்லாதபோது அப்பாவிடம் முறையிட்டேன். ஆரம்பத்தில் அவர் ஆறுதல் கூறினார்; பின்னால் சீறினார், பாய்ந்தார். 'நான் உங்களுக்கு மகனாய்ப் பிறந்திருந்தால் என் விருப்பத்திற்கிணங்கி நடந்திருப்பீர்களே, அப்பா!' என்றேன். 'மகனாயிருந்தால் வீட்டை விட்டு வெளியே போ என்று விரட்டி யிருப்பேன். பெண்ணாய்ப் பிறந்ததனால்தான் நீ பிழைத்தாய்' என்று நாலு வீடு கேட்க அவர் இரைந்தார். என்ன செய்வேன்?-இரவு பூராவும் கண்ணை மூடாமல் சிந்தித்துக்கொண்டே இருந்தேன். கண்ணிர் மேலாடையையும் தலையணையையும் நனைத்தது. 1 * , 'கமலுடன் ஓடிவிட்டால்...! இந்த எண்ணம் மின்னலைப் போல என் உள்ளத்தில் அடிக்கடி பாய்ந்து நெளிந்து ஓடியது-என்ன இருந்தாலும் நான், தாழ்ந்து கிடக்கும், அடிமைப்பட்டுக் கிடக்கும் பெண் குலத்தைச் சேர்ந்தவள்தானே?-'ஒடுகாலி’ என்ற உலகம் ஏசும்; நாடோடி’ என்று நாக்கில் நரம்பில்லாமல் நாடு பேசும்-இவை மட்டுமா? இன்னும் எத்தனையோ பட்டங்கள்!-எழுதக்கூடக் கை கூசுகிறது. அதற்குப்பின் ஒரு வாரமாகக் கமலுக்குக் கடிதம் எழுத முயற்சித்தேன்; எண்ணற்ற கடிதங்கள் எழுதிக் கிழித்துப் போட்டேன். கடைசியில்தான் அந்தக் கடிதத்தை எழுதி, அதை யும் மீண்டும் குப்பைக் கூடைக்கு அனுப்பி விடக் கூடாதே என்ற பயத்தினால் இன்னொரு முறை கூடப் படித்துப் பார்க்காமல் அந்த நிமிஷ மே தபால் பெட்டியில் போடச் சொல்லிவிட்டேன்.
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/81
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை