81 உதவியது. கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் பற்றிச் சிந்திக்கத் தங்கள் கடிதம் என்னைத் தூண்டியது. உடனே நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். அந்த முடிவின்படி, பெற்றோர்களுக்கு என்னைப் பொறுத்தவரை என் கடமைகளை நான் பரிபூரணமாகச் செய்துவிட்டேன் என்ற நினைவு எனக்கு இப்போது ஏற்பட்டு விட்டது. அடுத்த கடமை என் காதலும் அதன் எதிர்காலமும்தான்! - சிந்திக்கத் திராணியில்லாத ஆடுகளும், கோழிகளும் தம்மைப் பாதுகாத்து வந்த எஜமானுக்குப் பலியாகித் தத்தம் ‘கடமை களைச் செய்கின்றன. சிந்திக்கும் திராணியுள்ள நான் ஏன் அவற்றைப் பின்பற்ற வேண்டும்? - சங்ககாலத்துப் பொன்முடியார் பாடியது போல 'ஈன்று புரந்தாள்' என் தாய்; அது அவளது கடமை. கல்வி ஊட்டினார் என் தந்தை; அது அவரது கடமை. இதுவரை பெற்றோர் சொல்லைத் தட்டாமல் நடந்து வந்தேன்; அது என் கடமை-இனி நான் எனக்குச் செய்துகொள்ள வேண்டிய கடமையைப்பற்றிச் சிந்திக்க வேண்டாமா? லைலாவின் கடமை காயலைப் பற்றியது; ஜென்னி யின் கடமை மார்க்ஸைப் பற்றியது; என் கடமை கமலைப் பற்றியது! ஆறு பாசக் கயிறுகளைப் பற்றி அவர்கள் கவலைப் படாதபோது நான் மட்டும் ஏன் கவலைப்பட வேண்டும்? ஜெர்மெனியை விட்டால் பிரான்ஸ், பிரான்ஸை விட்டால் பெல்ஜியம், அதையும் விட்டால் இங்கிலாந்து என்று தங்கள் கண்முன்னால் முடிவற்றுப் பரந்து கிடக்கும் உலகத்தைப்பற்றி எண்ணினார்கள். மார்க்ஸ் ம்ை ஜென்னியும். அவர்களைப்போல நான் மட்டும் ஏன் எண்ணக்கூடாது? புரட்சிக் கனலே! பெற்றோர்களால் ᎧᏡ) &Ꮠ விடப்பட்டு, ஏழையாய்ப் போனபோது, வெந்த புண்ணில் வேல் பாய்ந்ததைப் போலத் தன் காதலியாலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில், கவிஞன் ஷெல்லி புலம்பி எழுதிய கடிதத்தை நான் படித்திருக்கிறேன். அது இப்பொழுது என் நினைவுக்கு வருகிறது. அதேபோலத்தான் என் கமல் - அதோ, தன் அழகிய கேசம் நெற்றியில் புரள, கண்ணிர் வடித்து நிற்கும் காட்சி என் கண்முன் தோன்றுகிறது. அவருடைய ம-இ-6
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/83
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை