இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
82 கண்ணிரைத் துடைக்க வேண்டியது, அவருடைய உள்ளத்திற்கு மீண்டும் மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டியது என்னுடைய கடமை என்பதைத் தங்கள் வாயிலாக இப்பொழுது நான் தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொண்டு விட்டேன் - அதை இடித்துக் காட்டி உணர்த்திய தங்களுக்கு என் நன்றி. இனி எங்கள் லட்சிய முழக்கம் இதுதான்: காதல் பணக்காரர்களுக்கு மட்டும் சொந்தமல்ல: கூரைக் குடிசையில் வாழும் ஆத்மாக்களுக்கும் சொந்தம்! ஒன்று சேர்ந்த கரங்களுக்கு வலிமை இருக்கும்வரை, கடைசிச் சொட்டு ரத்தம் எங்களது நாளங்களில் ஒடிக் கொண்டிருக்கும் வரை, யாரும் அதைத் தட்டிப் பறித்துவிட முடியாது; தட்டிப் பறிக்க ஒரு நாளும் விடமாட்டோம்! -லுவினா. - பிப்ரவரி 1955