யார் மனிதன்? தங்கமணி சொர்க்க லோகத்திலிருந்து மனிதனைக் காணும் பேரவா வுடன் பூலோகத்திற்கு வந்தது ஒரு தேவதை. வந்தவுடன் நேரே காட்டிற்குப் போயிற்று. அங்கு தவம் புரிந்து கொண்டிருந்தார், ஒரு ரிஷி. 'மனிதனைத் தேடி வந்தேன்; நீ யார்?' என்று ரிஷியிடம் வினவியது தேவதை. நான் மகான். தவத்தில் சிறந்த யோகி. கடவுளைப் போல எல்லாச் சக்திகளையும் பெறுவதற்காகத் தவம் பண்ணுகிறேன். உயர்ந்த மனிதன்!” என்றார் ரிஷி கர்வம் பொங்க. 'இல்லை, நீ மனிதன் அல்ல; மனிதனாய்ப் பிறந்தும் மனிதனாய் வாழாதவன்; சுயநலக்காரன்!' நகரத்திலுள்ள ஒரு நந்தவனத்தில் சீமான் ஒருவன் உலாவிக் கொண்டிருந்தான். தேவதை அவன் முன் பிரசன்னமாயிற்று. 'மனிதனைத் தேடி வந்தேன்; நீ யார்?' என்று அவனைக் கேட்டது தேவதை. நான் சீமான்; கோடீஸ்வரன். இந்தக் கிராமம் என்னுடையது; கிராம மக்கள் எனது அடிமைகள். கிராமத்தின் நான்கு திசை களிலும் கோயில்களும், குளங்களும் கட்டி வைத்திருக்கிறேன். ஆண்டிற்கொரு முறை பிராமணர்களுக்குப் பொன்னும் பொருளும் தானம் பண்ணுகிறேன். நானே கெளரவமான மனிதன்!' என்றான் சீமான். 'இல்லை, இல்லை. நீ மனிதனல்ல; மனித வேஷ மணிந்துகொண்டு மனிதனைச் சிறுகச் சிறுகப் பிய்த்து விழுங்கி, இரத்த ஏப்பம் விடும் பயங்கர அரக்கன்!' என்று கூவி விட்டு அகன்றது தேவதை. அரசாங்க மாளிகையின் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தார், ஒர் அரசியல்வாதி. 'மனிதனைத் தேடி வந்தேன்; நீ யார்?' என்று தேவதை அவனை வினவிற்று.
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/85
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை