84 நான் சிறந்த அரசியல்வாதி; அரசியல் ஞானி. மகா அறிஞன். மகத்தான மேதை! இந்த நாட்டின் முதல் மந்திரி பதவிக்காக உழைக்கிறேன். எனவே நாடெல்லாம் புகழும் நல்லதொரு மனிதன் நானே!' 'சட், நீ மனிதனைக் கைப்பாவையாய் நம்பிக் கொண்டிருக்கும் சுயநலக்காரன். மோசக்காரன், துரோகி! மனிதனை ஏய்த்துப் பிழைக்கும் எத்தன்!' என்று இரைந்து விட்டு, இந்த உலகத்தில் மனிதர்களே இல்லை தேவ லோகத்திலும் மனிதர்கள் கிடையாதே!' என்று கலங்கிற்று தேவதை-அதன் சிந்தனை சுழன்றது. 'மனிதன்-அவன் கடவுளின் சாயை அல்லவா? அந்தப் புனிதமிக்க உருவத்தை எங்கும் காணவில்லையே! மனித உருவில் மிருகங்களும், அரக்கர்களும் அல்லவா மலிந்து கிடக்கின்றன? எப்படியும் நான் ஒரு மனிதனைப் பார்த்தாக வேண்டும்; என் செய்வது?’-இவ்வாறு மனம் நொந்த அது எங்கெங்கோ அலைந்தது. எனினும் மனித சாயையைக்கூட அதனால் பார்க்க முடியவில்லை; அழுகையே வந்து விடும்போல் இருந்தது- ஆசை ஆசையாக ஒரு மனிதனைப் பார்க்க வேண்டுமென்று வந்தால் இந்த உலகம் என்ன இப்படி இருக்கிறதே!'-அதற்கு ஒன்றும் புரியவில்லை. கடைசியாக, கிராமத்தின் எல்லைக் கப்பால் வயலில் உழுதுகொண்டிருந்த ஒரு குடியானவனுக்கு முன்னால் தோன்றியது தேவதை. á á நான் மனிதனைத் தேடுகிறேன்; நீ யார்?’ 'அம்மா, நான் ஓர் உழவன்; சோம்பலற்ற என் உழைப்பைத் தேசத்துக்குக் கொடுத்துச் சாப்பிடுகிறேன். இதுவே என் வழக்கம்; விருப்பம். உலகத்தின் அமைதி என் குடும்பத்தின் அமைதி: லட்சியம். நான் எல்லார்க்கும் தோழன்; தொண்டன்!' 'ஆஹா நீயே மனிதன், நீயே கடவுளின் பிரதிநிதி!' உழவனைக் கண்டு ஆனந்தக் கூத்தாடிய வண்ணம் சொர்க்கத்தை நோக்கிக் கிளம்பிய தேவதை, கடவுளை நோக்கிக் கூறிற்று: 'கடவுளே! இதோ கடைசியாக உங்கள் உண்மைக் குழந்தை கிடைத்து விட்டான்'
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/86
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை