தெருவிளக்கு முதல் அத்தியாயம் விந்தன் பொழுது புலர்ந்தது: ஆம், 'யார் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை தன் காரியம் எந்த விதமான விக்கினமும் இன்றி நடந்தால் சரி!' என்று நினைக்கும் சுயநலவாதியைப் போலச் சூரியன் வழக்கம்போல் கிழக்கே உதயமானான். அவனைக் கண்டதும் புழுதி மிக்க அந்தத் தெருவிலே புள்ளினங்கள் ஆர்க்கவில்லை; விரைந்து செல்லும் 'சைக்கிள்' மணிகளும் பறந்து செல்லும் காரின் 'ஹாரன்'களும் தான் ஆர்த்தன. செந்நிறக் கிரணங்களை வீசி அந்தத் தெருவைப் பொன்னிற மாக்கவில்லை அவன், போக்கிடம் அற்றவர்கள் புழுதியின் நிறத்தை ஒத்திருந்ததால்! கட்சிச் செலவில் சேவை செய்யும் அரசியல் வாதியைப் போலக் கார்ப்பொரேஷன் செலவில் அவர்களுக்காக இரவெல் லாம் கண் விழித்துச் சேவை செய்த மயக்கத்தில் பொழுது விடிந்ததுகட்டத் தெரியாமல் தெருவிளக்கு துரங்கிக் கொண்டிருந்தது; விழித்துக்கொண்ட சென்னை மாநகரமோ அதன் தூக்கத்தைப் பொருட்படுத்தாமல் வழக்கம்போல் விரோதமும் குரோதமும் நிறைந்த தன் அசட்டுக் குழந்தைகளை எழுப்பி விளையாட விட்டது. அந்தக் குழந்தைகளில் சில மாடி வீடுகளில் வசிப்பவை; வேறு சில மண் குடிசைகளில் வசிப்பவை. மண் குடிசையில் வசிக்கும் குழந்தைகளுக்குத் தெரு விளக்கு 'பொதுவுடமை வாதி'யாகக் காட்சியளித்தது; மாடி வீட்டில் வசிக்கும் குழந்தைகளுக்கோ, அது 'இல்லாதவன் இருட்டில் செய்யும் பொல்லாமையிலிருந்து தங்களைக் காக்கும் வல்லவ'னாகக் காட்சியளித்தது. இந்தக் குழந்தைகளைத் தவிர இன்னும் சில குழந்தைகளும் மேற்படி நகரத்தில் இருந்தன; அவை அனாதைக் குழந்தைகள் - அந்தக்
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/88
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை