பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 குழந்தைகளுக்கு மாடி விடும் இல்லை, மண் குடிசையும் இல்லை - ஆனால் மனம் இருந்தது! மனம் இருக்கும் இடத்திலே பணம் இருக்குமா? இல்லை, பணம் இருக்கும் இடத்திலே மனந்தான் இருக்குமா? - இத்தகைய இரண்டுங் கெட்டான் உலகிலே, எண்ணெயோ மின்சாரமோ இன்றி எரியக் கூடிய விதத்தில் எவனோ கொடுத்த இரு கண் விளக்குகளையும் இழந்துவிட்டு, அந்தத் தெரு விளக்கின் அடியிலே இரந்து உயிர் வாழ்ந்து கொண்டிருந் தாள்' ஒருத்தி - பரந்து கெடுக இவ்வுலகியற்றியான்!” என்ற வள்ளுவப் பெருந்தகையாரின் சாபம் இன்றுவரை பலிக்காத தால்! அவள்தான் முத்தாயி - அவளுக்கு ஒரு மகன்; பெயர் ரத்தினம். முத்தாயிக்கு அவள் கணவன் வைத்து விட்டுப் போன ஒரே சொத்து ரத்தினம். அந்தச் சொத்துக்கு மனம் இருந்த தோடு மானமும் இருந்து தொலைந்தது - உருப்படவா? - ஊஹாலம்! முதல் நாள் முழுவதும் மூட்டை தூக்கிச் சம்பாதித்த காசில் மிச்சம் பிடித்து வைத்திருந்த ஒரனாவுக்கு இரண்டு இட்டிலிகளை வாங்கித் தாயாருக்கு எதிரே வைத்துவிட்டுக் குடி தண்ணிருக்காகத் தெருக் குழாயைத் தஞ்சமடைந்திருந்தான் அவன் - அங்கும் ஏகப் போட்டி - ஜாதி, சமய, அனுஷ்டான, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை வைத்து! - பாவம், தெருக் குழாய் என்ன செய்யும்? அவர்களுடைய அறியாமையைக் கண்டு அழுவதுபோலச் சொட்டுச் சொட்டாகக் கண்ணிர் வடித்துக் கொண்டிருந்தது. காத்துக் காத்துப் பார்த்தாள் முத்தாயி, தண்ணிருக்குப் போன மகனைக் காணவே காணோம் - "சரி, இட்டிலியைச் சாப்பிட்டு வைப்போம்; தண்ணிர் வரும்போது வரட்டும்!” என்று தட்டை எடுக்கத் தரையைத் தடவினாள் - அதையும் காணோம்! 'இங்கேதானே வைத்து விட்டுப் போனான், எங்கே போயிருக்கும்?' என்று மறுபடியும் தடவினாள் - இல்லை, இல்லவே இல்லை. ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தபோது, யாரோ இரு மிக்கொண்டே சிரிக்கும் சத்தம் அவள் காதில் விழுந்தது.