பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 對 பூர்வ ஜன்மத்தில் இவன் 'பெரிய மனிதர் வீட்டுப் பிள்ளை யாகப் பிறந்திருக்க வேண்டும் - நீ என்ன நினைக்கிறாய்?' என்று கேட்டான் அந்தோணி, 'ஆமாம் ஆமாம் - இல்லாவிட்டால் அந்த வாடை இன்னும் அவனிடம் அடித்துக் கொண்டிருக்குமா?' என்று தன் நண்பன் சொன்னதை ஆமோதித்தான் ரத்தினம். அதற்குள் அவனைப் பொருட்படுத்தாமல் தன்னந் தனியாகத் தட்டுத் தடுமாறிக் கொண்டே நடக்க ஆரம்பித்துவிட்டாள் முத்தாயி. அப்போது தினசரிப் பத்திரிகை யொன்றைப் பிரித்துப் பார்த்தபடி அவளுக்கு எதிரே வந்தான் ஒருவன். அவள்மேல் அவன் மோதிக்கொண்டு, 'ஏன் கிழவி, உனக்குக் கண் தெரியவில்லையா?” என்றான். 4 'எனக்குத்தான் தெரியவில்லை; உனக்குமா தெரிய வில்லை?' என்று திரும்பக் கேட்டாள் அவள். அவளை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, 'ஓ, நீ குருடியா? - சரிசரி, போ!' என்று அவளை விரட்டிவிட்டு, மீண்டும் பத்திரிகையைப் பார்ப்பதில் தன் கவனத்தைச் செலுத்தினான் அவன். 'ஆமாண்டா! அவள்தான் குருடி உனக்குத்தான் கண்ணிருக்கே - நீ பார்த்துப் போவதற்கு என்ன கேடு?' என்று அவன் கன்னத்தில் அறைந்தான் ரத்தினம். அதற்குள் ஏதோ ஒரு செய்தி அவன் உள்ளத்தைத்துள்ள வைத்தது. உடனே ரத்தினம் அடித்ததைக்கூடப் பொருட் படுத்தாமல் அவனுடைய முதுகில் தட்டிக்கொடுத்து, 'ஓ.கே! - இதோ பார், இன்றே நான் பிரேமலிலா பிக்சர்ஸ் டிரைவராவேன்; அப்புறம் நடிகனாவேன்; அதற்குப் பின் படாதிபதியாவேன்!” என்று பைத்தியக் காரனைப்போல உளறிக்கொண்டே அவன் எடுத்தான் ஒட்டம்! இரண்டாம் அத்தியாயம் “பிரேமலிலா பிக்சர்ஸ்' 'அப்பப்பா: 'டிரைவர்கள் தேவை' என்று பத்திரிகையில் ஒரு வரி போட்டாலும் போட்டுவிட்டார், விடிந்ததும் {