பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 விடியாததுமா யிருக்கும்போதே எல்லாரும் வந்து என் உயிரை வாங்குகிறார்களே!' என்று அலுத்துக்கொண்டே, வந்தவர்கள் அனைவரையும் 'விஸிட்டர் ஹா'லில் உட்கார வைத்துவிட்டு வெளியே வந்தான் 'ப்ரொடக்ஷன் மானேஜர்' பீதாம்பரம். அப்போது பத்து முழம் சேலையைப் பட்டும் படாமல் கட்டுவதைக்கூடச் சிரமமாகப் பாவிக்கும் அளவுக்கு 'முன்னேறிவிட்ட எதிர்கால நட்சத்திரங்கள் சில கலகல'வென நகைத்தபடி உள்ளே நுழைந்தன. அவர்களுடைய சிரிப்பொலி பீதாம்பரத்தின் அலுப்பைக் கொஞ்சம் தீர்த்தது: 'வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு!’ என்று தன்னை மறந்து எங்கேயோ பார்த்தபடிப் பாடக்கூட ஆரம்பித்துவிட்டான் அவன்! அந்தச் சமயத்தில், 'அங்கே எந்தக் கழுதை கத்தறது?’ என்ற இடிக் குரல் ஒன்று உள்ளேயிருந்து வந்தது. பீதாம்பரம் சட்'டென்று பாட்டை நிறுத்திவிட்டுச் சுற்றுமுற்றும் பார்த்தான். ரத்தினத்தின் அறையிலிருந்து தப்பி வந்த ஆசாமி அவனுக்கு எதிரே வந்து நின்று, 'ஏன் ஒய், இதுதானே பிரேமலிலா பிக்சர்ஸ்? என்று விசாரித்தான். எப்படியிருக்கும் பீதாம்பரத்துக்கு. 'அப்படித்தான் சொல்கிறார்கள்!' என்றான் வெறுப்புடன். 'ஓ கே! - இங்கே 'ப்ரொடக்ஷன் மானேஜர்'னு ஒரு மடையன் இருப்பானே, அவன் எங்கே இருக்கான்?' என்று கேட்டான் அவன். துக்கி வாரிப் போட்டது போலிருந்தது பீதாம்பரத்துக்கு. ஓ.கே.யை அவன் எரித்து விடுபவன்போல் பார்த்தான். 'ஓ, அந்த மடையன் நீதானா? - ஐ ஆம் வெரி ஸாரி - கவலைப்படாதே, நானும் மடையன்தான்! - வா போவோம், உள்ளே!” என்று வந்தவன் இருந்தவனை அழைத்தான். பீதாம்பரத்துக்கு ஒன்றும் புரியவில்லை; அவனைப் பார்த்தது பார்த்தபடி நின்றான். 'என்ன சந்தேகம், உனக்கு? கீழ்ப்பாக்கத்திலிருந்து தப்பி வந்துவிட்டேன் என்று நினைக்கிறாயா? - அதெல்லாம் ஒன்றுமில்லை; நானும் டிரைவர்தான் - வா, வா!' என்று பீதாம்பரத்தைப் பலவந்தப்படுத்தி உள்ளே தள்ளிக்கொண்டு சென்றான் ஓ.கே.