பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 'மரியாதையாகச் சொல்கிறேன். பேசாமல் இப்படி உட்கார்!" என்றான் பீதாம்பரம். 'அப்படி உட்கார்ந்தால் அவர்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்?' என்று மற்றவர்களைச் சுட்டிக் காட்டினான் ஓ.கே. "உட்காரப் போகிறாயா, இல்லையா?” | 'இல்லை 'சரி, நட வெளியே!” 'அதை நீ சொல்ல வேண்டாம்; முதலாளி வந்து சொல்லட்டும்.' 'இதென்னடா வம்பு? - அவர் இன்னும் எழுந்திருக்கவில்லை, ஐயா!' 'எழுந்திருக்க வில்லையா! - உன்னால் எழுப்ப முடிய வில்லை என்று சொல்லு!’ என்று அருகிலிருந்த வீணையை எடுத்து மீட்டிப் பூபாளத்தைப் போடு போடென்று போட்டான் ஓ.கே. பீதாம்பரம் அதைத் தடுத்து, 'பூபாளம் வாசிக்க இங்கே எத்தனையோ பேர் இருக்கிறார்கள்; நீ எழுந்திரு!' என்றான். அதற்குள், 'அங்கே என்ன சத்தம்?' என்ற இடிக் குரல் மறுபடியும் உள்ளேயிருந்து வந்தது. 'ஒன்று மில்லை...' என்று கையைப் பிசைந்த வண்ணம் இழுத்துக் கொண்டே கதவை மெல்லத் திறந்து எட்டிப் பார்த்த பீதாம்பரம், சட்டென்று தலையை வெளிய்ே இழுத்துக்கொண்டு 'திருதிரு'வென்று விழித்தான். காரணம், 'அண்டர் கிரவுண்ட் பிராந்தி'யால் 'செந் தாமரைக் கண்ண'னாக்கப்பட்ட முதலாளி, கோபியர் வேஷத்தில் பல பெண்கள் சூழ அங்கே அரியாசனத்தில் வீற்றிருந்தார், 'கொஞ்சும் ரமண'னாக! 'கந்த லீலா அல்லவா எடுக்கப்போவதாகச் சொன்னார்!' - இப்படி முணுமுணுத்தது பீதாம்பரத்தின் வாய். 'அதிலே ரெண்டு "ஹீரோயினுக்கு மேலே வேலை இருக் காதே!” - பதிலுக்கு இப்படி முணுமுணுத்தது ஓ.கே.யின் வாய்.