95 'இரண்டும்தான்! முதலாளி வந்ததும் கதவைத் திறந்து விட்டுவிட்டு நிற்பேன்; ஏறி உட்கார்ந்ததும் ஒட்டுவேன்....! 'முடியாது; கதவை நான்தான் திறப்பேன்!” 'மன்னிக்கவும்; அது உங்கள் வேலையல்ல.” 'என் வேலை தான்!' 'சரி, பார்த்து விட்டால்போச்சு!” 'நீ யாரடா பார்ப்பதற்கு?- எட்டிப் போடா, கழுதை' என்று அவனைப் பிடித்து அப்பால் தள்ளினான் பீதாம்பரம். அப்பொழுதும் அவன் அசைந்து கொடுக்காமல், 'தப்பு: உங்களுக்குச் சேரவேண்டிய கெளரவத்தை எனக்காக நீங்கள் விட்டுக் கொடுக்கப் பார்ப்பது ரொம்ப ரொம்பத் தப்பு!-அடியேன் நாய்; தாங்கள்தான் என் மதிப்பிற்குரிய கழுதை!” என்றான். 'ஜாக்கிரதை! உனக்குக் குரைக்கத் தெரிந்தால் எனக்கு உதைக்கத் தெரியும்!” என்றான் அவன் கோபா வேசத்துடன். 'உனக்கு உதைக்கத் தெரிந்தால் எனக்குக் கடிக்கத் தெரியும்!” என்றான் ஓ.கே. பீதாம்பரத்துக்கு ஆத்திரம் தாங்கவில்லை; அவன் கன்னத்தில் பளிரென்று அறைந்துவிட்டான். வழக்கம்போல் அதையும் பொருட்படுத்தாமல், 'ஒ. கே! - கதை தெரியுமா, உங்களுக்கு?’ என்று கேட்டுக்கொண்டே பீதாம்பரத்தின் முதுகில் தட்டிக் கொடுத்தான் அவன். அதற்குள், 'என்ன கதை?' என்று கேட்டபடி, அங்கே வந்து விட்டார் பட அதிபதி. 'ஏறுங்கள், சொல்கிறேன்!” என்று அவருக்குக் கதவைத் திறந்து விட்டுவிட்டு, 'வரட்டுமா!-சீரியோ?” என்று பீதாம்பரத்தை நோக்கிக் கையை ஆட்டிய வண்ணம் விடை பெற்றுக்கொண்டான் ஓ.கே. கார் கிளம்பிற்று. 'இனிமேல் பிடிக்க வேண்டிய காக்காக் களையெல்லாம் இந்தப் பயலே பிடித்துவிடுவான் போலிருக் கிறதே? இவனை முதலில் தொலைக்க வேண்டும்!” என்று கருவிக்கொண்டே பீதாம்பரம் திரும்பினான். 'கதையைச் சொல்லவே யில்லையே?’ என்றார், காசில்லா மல் கதை தேடுவதிலேயே எப்பொழுதும் கவனமாயிருக்கும் படாதிபதி பத்மனாபன்.
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/97
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை