பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தசாவதாரம் 



 

விளக்கினை வரிசையாக ஏற்றி வைத்து விழாக் கொண்டாடிய மரபே இன்றைய தீபாவளிப் பண்டிகையாக உருப்பெற்றது. (தீப+ஆவளி = தீபாவளி) ‘தீபம்’ என்பது விளக்கு, ‘ஆவளி’ என்பது வரிசை. எனவே, தீபாவளி என்பது விளக்கு வரிசைவழிக் கொண்டாடும் விழாவாகும். தமிழ்மக்கள் இதை ‘விளக்கீடு’ எனப் போற்றுவார்கள். தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடும் வட நாட்டவர் தம் வீடுகளில் வரிசையாக விளக்கேற்றி வைத்துகொண்டாடும் சிறப்பினை இன்றும் நாம் காண்கின்றோம்.

இவ்வாறான தீப ஆவளி திருமாலினது பத்து அவதாரங்களுள் ஒன்றாகிய கிருட்டின அவதாரத்தோடு தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. நாட்டையும் நலத்தையும் பாழ் படுத்திய நரகாசுரனைக் கண்ணன் கொன்ற நாளாக இதைக் குறிப்பர். கொடுமைகளின் பரிசாகிய சாவினை ஏற்ற நரகாசுரன், கண்ணனை நோக்கித் தன்னாளை உலக