பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தசாவதாரம்

27


மன்றி, அனுப்பியவர்களையும் சேர்த்து ஒரு சேரக்கொன்று, யார் நிறுத்தினும் நில்லாது உலகெங்கும் சுற்றிப் பெரும் பிரளயங்களை உண்டாக்கி, மனிதப் பூண்டே இல்லாது-உயிர்வர்க்கமே-இல்லாது ஒழிக்கும் என்பது உண்மை. இதை உலகில் இப்போது நடை பெற்றுவரும் அணுகுண்டு முதலியவற்றின் சோதனைகள் ஓரளவு உணர்த்துகின்றன. இவ்வுண்மையை விளக்க வருவதுதான் கல்கி அவதாரமாகிய இறுதி அவதாரம். யார் தடுத்தாலும் நில்லாது, மனம் போனபோக்கிலே, அடக்க முடியாத வேகத்தே, மிருக உருவோடு உணர்வும் கொண்டு, அனைத்தையும் அழித்துப் பெரும்பிரளயத்தை உண்டாக்கி, அதன் மேல் ஒடும் கல்கி அவதாரம் காட்டும் காட்சிதான் இன்றய மனித இனம் பெறப் போகின்ற இறுதிக்காட்சி. எத்தனை யு. என். ஒ.க்கள் தோன்றினாலும், மனித உடலில் உள்ள மிருக உணர்ச்சியை--பேராசையை-அடக்க முடியாது. அது வெறி பிடித்து, உண்டாக்கினவனே அடக்க முயன்றாலும் அடங்காது ஓடி உழன்று உலகை அழித்து, அனைத்தினுக்கும் அடங்காது ஒடி பூதத்தோற்றத்தில் படிப்படியே ஒன்றிலொன்று அடங்கி, இறுதியில் வெளியாகி மறைந்துநிற்கும். இக்கூற்று, கேட்போர்க்கு வேடிக்கையாகத் தோன்றும். ஆனால், இன்றைய மிருக உணர்வு கொண்ட மனிதன் செல்லும் நெறி, அத்தகைய கொடிய இறுதி நாளுக்கே இவ்வுலகை ஈர்த்துச் செல்லுகின்றது. இன்றைக்கும் காலம் கடக்கவில்லை. மனிதன் ஓடாது, பறவாது, உட்கார்ந்து, மனித உள்ளத்தோடு நாடெங்கும் வாழ நல்வழி உண்டு என்று சிந்திப்பானாயின், உய்வுண்டு. ஆனால் அவன் சிந்திப்பதேது? இது நிற்க.

‘தீபாவளி தமிழருக்கு உடன்பாடு அன்று,’ என்று கூறுபவர்களும் உள்ளனர். எப்படியாயினும், இந்நாளில் அதனொடு தொடர்பு பெற்றுள்ள கண்ணனை நினைக்