பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

மனிதன் எங்கே செல்கிறான் ?



கும் போது, பிற அவதாரங்களும் நம் மணக்கண்முன் வருகின்றன. அவதாரங்கள் தோன்றினவோ, அன்றிக் கற்பனையோ, எப்படியாயினும், அவற்றின் அமைப்புகள் இவ்வாறு உயிர்த்தோற்ற வளர்ச்சியை உணர்த்துகின்றன என்று கொள்வதில் தவறு இல்லையே!

இவ்வாறு திருமாலின் அவதாரங்கள் உயிர்த்தோற்ற வளர்ச்சி ஒடுக்கங்களை விளக்குகின்றன. அந்த அவதாரங்களில் ஒன்றான கண்ணனைப் போற்றும் தீபாவளி நாளின் போது எழுந்த கட்டுரை இது. எனவே, இந்த நாளில் மனிதனை மனிதனாக வாழவைக்க முயல்வோம் என்று மக்கள் அனைவரும் உள்ளத்தால் எண்ணுவார்களாயின், அவர்தம் வீடுகள் மட்டுமன்றி, உள்ளங்களும் நல்லெண்ண விளக்குகளால் ஒளி வீசும்! அத்தகைய உள்ளொளி வீசுவதே விழாவின் அடிப்படை. மனிதப் பண்பாடு. நல் ஒளி பரந்துநானிலம் வாழ்க என வாழ்த்தி நாமும் இக்கட்டுரையை முடிக்கின்றோம்!