பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழன் ஒரு சமரச ஞானி

43


வள்ளுவர் வாய்மொழியறிந்து, அதன்படி அவற்றிற்கு உற்ற அல்லலை நீக்கும் நெறியால் தம்மையே வீழ்த்த நினைத்த அத்தமிழ்ப் பெரு வேந்தர்தம் செயல் தமிழர் தம் சமரச உணர்வுக்கு எடுத்துக்காட்டாகுமன்றோ?

சங்க காலத்திலே இன்னும் எத்தனையோ நிகழ்ச்சிகள் இவ்வாறு நம்முன் நிழலிடுகின்றன. அவை அனைத்தும் உலகில் நாம் வாழ வழி காட்டிகளாய் அமைகின்றன. மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டிய பண்பாட்டிலே வழுவாது நின்று நம்மிடை வாழ்கின்றவர் எத்தனை பேர்? உடன் பிறந்தவர்களை வழக்கு மன்றம் ஏற்றி ஆயிரம் ஆயிரமாகச் செலவினையும் அல்லலினையும் உண்டாக்கிக் கொடுமை புரிவோர் எத்தனை பேர் ? உழைத்துக் கொடுத்தும் உழைத்தவனை உதாசினம் செய்து, உள்ளவற்றை எல்லாம் தம்முடையனவாகக் கொள்ளை கொண்டு அவற்றால் தம்மை மறந்து தருக்குவார் எண்ணிக்கை உலகில் குறைவா? இன வளர்ச்சியென்றும், நாட்டு வளர்ச்சியென்றும் கூறிக் கொண்டு, பெருஞ்சண்டைகளையும் உலகப் போர்களையும் உண்டாக்கிக் கொண்டு வரும் வல்லரசுகளுக்குத்தான் உலகில் பஞ்சம் உண்டா ? ஒரே மனித இனத்திலே சாதியாலும், சமயத்தாலும், நீதியாலும், நிறத்தாலும், செல்வத்தாலும், பட்டத்தாலும் பாகுபாட்டை வளர்த்து, தொடுவதும் குற்றம் பார்ப்பதும் குற்றம் என்ற கண்ட முட்டு கேட்ட முட்டுக் கூறிக் கேலிக் கூத்தாக வாழும் வீணர்கள் இன்று உலகில் பெருகியுள்ளதை நாம் அறி யோமோ? ‘மனிதன் பகுத்தறிவுள்ளவன் ; நல்லதையும் தீயதையும் ஆராய வேண்டியவன்,’ என்ற நெறியை மறந்து, மற்றவருக்கு என்றும் கொடுமையே செய்து, சுயநலத்தால் தன் வாழ்வை உருவாக்கி உலகை உருக்குலைக் கும் கொலையாளிகள் இன்று வாழவில்லையா? நாகரிகம் என்ற போர்வையிலே, கோடிக் கணக்கில் மக்களைக்