பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

மனிதன் எங்கே செல்கிறான்?


அவனை அப்பகையின் இடையிலே நிறுத்தி, சமரச ஞானம் அறிய வழியற்றோரையும் அவ்வழிக்கு அவர் ஈர்த்துச்செல்லும் நிலை உயர்ந்ததன்றோ?

இத்துணைப் பெருநெறியாகிய சமரச வாழ்வில் தமிழர் அனைவரும் பழகின் உயர்வுண்டு. இவர்தம் வாழ்வுக்கும் கூற்றுக்கும் முலகாரணமாய் நிற்கும் ஒன்று இப்போது நம்முன் நிழலிடுகின்றது, ஆம் ! அதுதான் ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்,’ என்ற ஒப்பற்ற அறநெறி—சமரசஞான வழி காட்டி-சங்க இலக்கியத்தில் தலையாய தொடர். இத்தொடர் கொண்டே அன்று தொட்டு இன்று வரை தமிழன் தன் நிலை கெடா வகையில் சமரச சதானியாய்த் திகழ்கின்றான்!

அத்தகைய பரந்த சமரச ஞானத்திடையில் முகிழ்த் ததுதான் இன்றைய ‘தமிழர் திருநாள்’. தமிழனது தலை சிறந்த நாள் இந்த நாள் தான். இவ் விழாவில் அவன் அனை வரையும் ஒத்து நோக்கிச் சமரச உணர்வோடு உலாவுகின்றான். ஏன்? இது மட்டுமென்ன! தமிழன் விழாக்கள் அத்தனையுமே சமரச நோக்கின் அடிப்படையில் பிறப்பனவேதாம். விழா என்றால், ஏதோ வேடிக்கையாகப் பண்டம் பலகாரம் செய்து உண்டு, புத்தாடை உடுத்திக் கொள்வது என்ற அளவில் அது நின்று விடாது. விழாவைப்பற்றி நாட்டு மக்களுக்கு முன்னறிவிக்க வள்ளுவ முதுமகன் அரச யானையின் மீதிருந்து அறிவுறுத்தியதாக மணிமேகலை போன்ற பழங்கால இலக்கியங்கள் பேசும் எழுத்தோவியங்களைக் காணின், அவன் விழாவின் நோக்கம் நன்கு புலப்படும். விழாவைப் பற்றிக் கூறுமுன் வாழ்த்து முகத்தான் விழாவாற்ற நாடு எந்நிலையில் இருக்க வேண்டும் என்பதைக் காட்டுகின்றான்.