பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

படிப்பது எதற்கு?



 

ன்று சென்னை நகரமே ‘நிர்த்தூளிப்பட்டது’ என்று பேசிக்கொண்டார்கன். அப்படியென்றால், அது வரை காணாத பெருங்கூட்டம் கூடி எங்கும் புழுதி எழுப்பி மக்கள் திரண்டிருந்தார்கள் என்பது பொருளாகும். சென்னை நகரத்துக்கு வாராத பெரு விருந்து வந்ததாம். ரஷ்ய நாட்டு இரு பெருந்தலைவர்களும் சென்ற நவம்பர் மாதம் 28-ஆம் தேதி சென்னைக்கு வந்தார்களல்லவா? அந்த நாளைத்தான் அப்படியெல்லாம் விதந்து பேசினார்கள். அது உண்மையுங்கூட.

சென்னை நகருக்கு இதுபோன்று வெளிநாட்டுப் பெருந்தலைவர் யாரும் இது வரை வந்ததே இல்லையே! இந்தியா உரிமை பெற்ற பிறகு எத்தனையோ வெளி நாட்டு மக்கள் வந்தபோதிலும் இதுபோன்ற வகையில் அவர்களை மக்கள் வரவேற்கவில்லை. உலகையே ஆட்டிப் படைக்கும் வகையில் ஆளும் ரஷ்யப் பெருந்தலைவர்களைக் காண யார்தாம் விரும்பமாட்டார்கள்? சென்னை