பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

மனிதன் எங்கே செல்கிறான்?


செயலினும் கீழ்ச்சென்றது. இன்றைய நம் மாநிலக் கல்வி நிலையங்களும், அதைப் பொறுப்புடன் நடத்தும் தலைவர்களும் இவ்வாறு செய்ய விடுவது நாட்டுக்கே இழுக்காகும்.

ரஷ்யத் தலைவர்கள் மேடையில் அமர்ந்தது தான் தாமதம்! நாற்புறத்தும் உட்கார்ந்திருந்த அந்தப் ‘படித்த, படிக்கின்ற, பயிற்றும்’ பெரியவர்கள் விலங்கானார்கள். நாற்கால் பாய்ச்சலில் ஓடினார்கள், எங்கே இளம்பெண்களும் சிறுவரும் கூடியிருந்தார்களோ, அந்த இடத்தை நோக்கி, தலைவர்களுக்குக் காட்ட ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகளெல்லாம் பாழாயின, பாவம்! மேலிருந்து நம் கல்வி அமைச்சர், ‘ஒழுங்கை நிலை நாட் டுங்கள் ! நிலை நாட்டுங்கள்!’ என்று தொண்டைவற்றக் கத்தியது தான் மிச்சம். நாட்டுப் படிப்பு மனிதனை மனிதனாக்குவதாயிருந்தால் தானே ஓடி வந்தவர்கள் கேட்பார்கள்? கேட்கவில்லை. எப்படியே! இரண்டொரு நிகழ்ச்சிகள் நடந்தன. பேச விரும்பியிருந்த தலைவர்கள் கூட, தாங்கள் பேசினால் தங்கள் உள்ளத்தில் உருவான ‘படித்தவரை’ப் பற்றிய தாழ்வான எண்ணம் வெளிப்படுமோ என்று பேசாது, உடன் வந்த மற்றொருவரைப் பேச வைத்தார்கள் ; ‘படித்தவர்’ செயலைச் சொல்லாமல் சொல்லி வியந்தார்கள். நிகழ்ச்சி நிறைவேறிற்று.

இந்த நிகழ்ச்சியின் மூலம் நான் யாரையும் குறை கூற விரும்பவில்லை. குறை கூற ஆரம்பித்தால் பலருடைய பகைமையை நான் சம்பாதித்துக் கொள்வதைத் தவிர்த்து வேறு உருவான பலன் ஏற்படப் போவதில்லை என்பதையும் நான் அறிவேன். ஒழுக்கம் பற்றியும் உயர்ந்த பண்பாடுகள் பற்றியும் பேசும் வள்ளு ஞவருக்கு வாரந்தோறும் மாநாடுகள் கூட்டும் இந்த யுகத்திலே தான் நாம் வாழ்கின்றோம். ஆனால், அவ்வொழுக்-