பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதுவா முன்னேற்றம்?

73


குமா இந்த நூற்றாண்டில்?’ என்று தான் உங்களுக்குக் கேட்கத் தோன்றுகிறது. மயங்க வேண்டா . 26-9-53 தின மணியைப் புரட்டிப் பாருங்கள். நாகபுரியின் செப்டம்பர் 24-ஆம் தேதியிட்டு, ‘அடகுப்பெண் ஆற்றில் விழுந்தாள்’ என்ற தலைப்பில் இச்செய்தியைக் காண்பீர்கள்.

‘பத்திரிகையில் வரும் செய்திகள் அத்தனையும் உண்மை என்று இந்தக் காலத்திலேதான் கொள்ள முடியவில்லையே! அது போன்று ஒரு வேளை வேடிக்கைச் செய்தியாகவும் இது இருக்கலாம்,’ என்று முதலில் நினைத்தேன். ஆனால், ‘நாளும் தேதியும், ஊரும் பேரும், தொகையும் பிறவும் திட்டமாகக் குறிப் பிட்ட பின் ஐயப்பட இடமில்லையே!’ என்றது என் மனம். செய்தி பொய்ச் செய்தியானால், கவலை இல்லை; உண்மையில் நடந்த ஒன்றாய் இருந்து விட்டால்...

செய்தி சிறியது தான். சிந்தித்துப் பார்க்கும் செயல் வீரர்களுக்குத் திக்கெல்லாம் தீமூட்டும் கொடுஞ் செய்தியல்லவா இது? இதைப் படித்ததும் என் பக்கத்திலிருந்து ஒரு நண்பரைப் பார்த்து, ‘இந்த இருபதாம் நூற்றாண்டிலா, அதுவும் உரிமை வாழ்வு பெற்ற நம் இந்திய நாட்டிலா இக்கொடுமை?’ என்று கேட்டேன். அவர் மிகச் சாவதானமாக, ‘ஆமாம். இது போன்ற செயல்கள்—அப்பக்கங்களில் சாதாரண மனிதர்களை அடகு வைக்கும் அடிமை வழக்கங்கள்—உண்டு,’ என்று கூறினார். இன்னும் என் சிந்தனை நீண்டது.

‘ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் மில்லை சாதியில்'

இழிவு கொண்ட மனிதர் என்பது இந்தியாவில் இல்லையே.’,

5