பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதுவா முன்னேற்றம் ?

75


வைத்துப் பொன் பெறுகின்ற அடகு முறையிலும், பொருளையும் கொடுத்துக் கூடவே பெண்ணையும் கொடுத்தல் ஒரு தனிப்பட்டது தானே? ஆள் அடிமையாகிய அடகு இன்னும் நாட்டுப்புறங்களில் தீராத பிரச்சினையாகவே உள்ளது. ‘காலில் நகமுளைத்த கால முதற்கொண்டு அடிமை வாழ்வு’ வாழ்ந்ததைக் காட்டும் காட்சிகள் நம் மனக் கண்முன் நிற்கின்றான். எனினும், இப்படிப் பெண்ணை அடகுப் பொருளாகப் பணயம் வைக்கின்ற காட்சி நமக்குப் புதிதாகவே உள்ளது.

பாரதத்திலே திரௌபதியைப் பணயமாக வைத்துச் சூதாடுகின்றான் தருமன். அதில் அவன் தோற்க, அதற்காகப் பணயப் பொருளாய் நின்ற திரௌபதி, பற்றி ஈர்க்கப்படுகின்றாள். ஆனால் அவள் அதற்கு முன் அத்தருமன் ‘தன்னைத் தோற்று என்னைத் தோற்றானா?’ என்பது போன்ற கேள்விகளைக் கேட்டுத் தன்னை அடகு வைத்தது தகாதது எனக் காட்டுகின்றாள். ஆனால், இந்தப் பேதைப் பெண் அப்படி ஒன்றும் கேட்கவில்லை. அயலான் கைப்படுமுன்–ஏன்–கண்ணிற்படுமுன் ‘சாதல் நலம்’ என்று ஆற்றில் விழுந்து இறந்தாள்.

இந்நிகழ்ச்சி பத்திரிகை அளவில் வந்ததால் இந் நாட்டில் பாராளும்மன்றத்திற்கும் இது எட்டியிருக்கத்தானே வேண்டும்? இந்திய யூனியனும் இது பற்றி அறிந்திருக்கத்தானே வேண்டும்? ஆம். அவர்கள் இக்கொடுமை நீக்க என்ன வழி செய்தார்கள் என்பது ஒருவேளை மேல் வரும் செய்திகளால் விளக்கமுறலாம். அதை நாம் இனியும் பொறுத்திருந்து காண்போம். எனினும், இம்மனிதன் இப்படி முன்னேறிக்கொண்டே செல்வதாகக் கூறிக் கொண்டு பாழுங்குழியிலேயா–படுபாதாளத்திலேயா–இன்னும் இருக்க வேண்டும்