பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒன்றுமிலை



 

லகம் தோன்றிய நாள் தொட்டு 'ஒன்றுமிலை' என்ற சூனிய வாதமும் நிலவித்தான் வருகின்றது. கண்ணால் காண்கின்ற உலகமும். இவ்வுலகிலே காணும் பல வகைப்பட்ட பொருள்களும், அப் பொருள்களால் ஆகிய பயனும், இவற்றிற்கெல்லாம் மூலகாரணமாய் நிற்கின்ற பொருளும் நிலைத்த தன்மை உடையன என்று காண்கின்றவர் ஒரு சிலர். உலகினுக்கும் உண்டாக்கிய இறைவனுக்கும் உள்ள சில வேறுபாடுகளை அறிந்து, அவற்றிற்கேற்ப நடந்துகொள்கின்றவர் ஒரு சிலர். உயிர் நிலையுள்ள ஒன்றாயிருப்பினும், அது உடலுள் புகுந்து உலகினுள் உலவுகின்ற காலம் மிகக்குறுகியதுதான் என்று அறிந்து, அக்குறுகிய காலத்துக்குள் அவ்வுடம்பு பெற்ற பயனைத் தாமும் துய்த்து உலகுக்குந் தம்மால் இயன்ற உதவியையும் புரிவர் அறிந்தோர். ஒருபுறம் உலகமே பொய் என்பாரும், மற்றொருபுறம் உலகம் மட்டுந்தான் மெய் என்-