பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் ஊழியர்

95



ஆட்சி வாழ்வு நிலையற்றதே. ஆனால், அரசாங்க உத்தியோகம் ஏற்பவர்கள் ஒரு முறை நிலைபெற்று விடுவாராயின், குறைந்தது அவரது ஐம்பத்தைந்தாவது. வயது வரை அவரது பதவி பறிபோக வழியில்லை. நெழி தவறாது உண்மை வழியில் ஒழுகின், அவர்கள் நிலை உயருமேயன்றித் தேய்வு பெறாது. எனவே, வந்து வந்து செல்லும் ஆளுகின்ற தலைவர்களைக் காட்டிலும், ஆயுள் முழுவதும் நிலைத்து நின்று மக்கட்பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கே பொறுப்பு அதிகம் என்பது துணிபு.

உத்தியோகத்தர் என்னும்போது அவருள் எத்தனையோ பிரிவுகள் நம் மனக்கண் முன் வருகின்றன. சாதியாலோ, சமயத்தாலோ, நீதியாலோ, நிறத்தாலோ உலகில் எந்த வேறுபாடும் காணலாகாது என்று அரசியற்றலைவர்களும், சீர்திருத்தவாதிகளும் ஒரு சேர முழங்கிக்கொண்டிருக்கும் அதே வேளையில் அந்த வேறுபாடுகள் இன்னும் பலவாறு வளர்ந்து கொண்டே செல்கின்றன. அந்த வேறுபாடுகளோடு உயர்தர உத்தியோகத்தர், கெஜட்டுப் பதிவு உத்தியோகத்தர், பதி வில்லா உத்தியோகத்தர் என்று உத்தியோகத்திலே சில வேறுபாடுகள் உள்ளதைக் காண்கிறோம். செல்வர் வறியர் என்ற வேறுபாடும், படித்தார் அல்லார் என்ற வேறுபாடும், நகரத்தார் நாட்டுப்புறத்தார் என்ற வேறுபாடும் இன்னும் எத்தனையேர் வேறுபாடுகளும் நாள்தோறும் பெருகிக் கொண்டே தான் செல்கின்றன. இத்தகைய வேறுபாடுகள் இல்லாத காலமே மனிதன் மனிதனாக வாழும் காலமாகும்.

அரசாங்க உத்தியோகத்தர்களிலே கெஜட்டுப் பதிவு பெற்றவர், பெறாதவர் என்ற இரு வகையார் இன்று இருக்கின்றனர். இவர்களையன்றிச் சாதாரணப் பணியாளர்களும் பிறருங்கூட இருக்கின்றார்கள். இந்தப்