பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 விந்தன்

‘அதற்காக?”

‘இனி நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான் - உன்னுடைய கணவனின் இறந்த நாள்வரும் போதெல்லாம் நீ எனக்கு இனிப்பு வழங்கவேண்டும்; என்னுடைய மனைவியின் இறந்தநாள் வரும்போ தெல்லாம் நான் உனக்கு இனிப்பு வழங்கவேண்டும் - இதுவே நம்மைச் சுதந்திரமாக நடமாட விட்டதற்காக நாம் அவர்களுக்குச் செய்யும் ஈமக்கடன்; நன்றிக்கடன்’

‘அடப்பாவிகளா!’

என்னையும் அறியாமல் என் வாயிலிருந்து இந்த வார்த்தை வந்ததுதான் தாமதம், ‘யார் அது? ‘என்று கேட்டபடி விழுந்தடித்துக்கொண்டு வெளியே வந்தார் அவர்.

‘'காரியம் மிஞ்சிப் போன பிறகு சாண் போனா லென்ன, முழம் போனாலென்ன? ‘ என்று எண்ணித் துணிந்த நான், “பயப்படாதீர்கள், உங்களைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது: ‘என்றேன், நிமிர்ந்து. நின்று ஒருவிதத்தில் அதுவும் உண்மைதானே?

‘தெரியாமலா இவ்வளவு நேரமாக இங்கே நின்று, நாங்கள் பேசிக் கொண்டிருந்ததையெல்லாம் நீ ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தாய்?”

‘அதனாலென்ன, வீட்டுக்குப் போனதும் காதை ஒரு முறைக்கு இரு முறையாக அலம்பிக்கொண்டு விடுகிறேன்!”

இந்த சமயத்தில், ‘என்ன துணிச்சல், இந்தப் பெண்ணுக்கு? என்று கேட்டுக்கொண்டே வெளியே வந்தாள் அவருடைய அந்தரங்கக் காதலி.