பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 விந்தன்

பண்புக்குறைவாகப் பேசுகிறாய்!’ என்றார் தம்முடைய நீசத்தனத்துக்கெல்லாம் கேடயமாக விளங்கிய ‘பண்பு”டன்.

‘எனக்குப் புரியலில்லை. எதை நீங்கள் பண்பு என்கிறீர்கள்?'என்றேன் நான்.

‘மலர்ந்தும் மலராத பருவமல்லவா? எல்லாமே புரிந்தும், புரியாமல்தான் இருக்கும், இப்போது’ என்றார் அவர், ‘புன்னகையுடன்- ஆம், அதை எப்படிப் புன்னகை என்பது?

‘எனது பருவம் கிடக்கட்டும்; எடுத்துக்கொண்ட விஷயத்துக்கு வாருங்கள், முதலில்!” என்றேன் நான்.

‘வருகிறேன், வருகிறேன். பொதுப்பணியாளர் தம் புறவாழ்வை கவனிப்பது மட்டுமே பண்பு: அவ. தம் அகவாழ்வைக் கவனிப்பது பண்பன்று. இதை நீ புரிந்துக் கொண்டிருந்தால், எடுத்ததெற்கெல்லாம் என்னை இடித்துரைக்க மாட்டாய் -இல்லையா?’ என்றார் அவர், கனிவுடன்.

‘எனக்குத் தெரிந்தவரை இந்த விஷயத்தில் இனிநான் புரிந்து கொள்வதற்கு ஒன்றுமில்லை என்றே நினைக்கிறேன். ஏனெனில் ஒருவன் எனக்குத் திருடாதே’ என்று உபதேசம் செய்ய முன்வந்தால், முதலில் அவன் திருடாமல் இருக்கிறானா என்று கவனிக்க எனக்கு உரிமையுண்டு; ஒருவன் எனக்குப் பொய் சொல்லாதே?” என்று உபதேசம் செய்ய முன்வந்தால், முதலில் அவன் பொய் சொல்லாமல் இருக்கிறானா என்று கவனிக்க எனக்கு உரிமையுண்டு. பண்புக்குறைவு என்ற பேரால் அந்த உரிமையைப் பறிக்க யாராவது முயன்றால் அதற்குநான் ஒருநாளும் இடம் கொடுக்கமாட்டேன் - வணக்கம் வரட்டுமா?’ என்று நான் வந்த வழியே திரும்பினேன்;