பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 விந்தன்

ஆன்மாவின் தண்டனையிலிருந்து தப்ப முடியாதல்லவா? அதைத் தான் அனுபவித்தேன் நான்!

இந்த வேதனையி லிருந்து என்னை மீட்பதற்காக அவள் எனக்குக் காட்டிய இன்னொரு வழிதான் அந்தக் குடி - ஆம்; குடித்தேன்; என் ஆன்மா என்னை வதைக்காத அளவுக்கு நான் குடித்தேன்! அன்றிலிருந்து என் அகவாழ்வு வேறு, புறவாழ்வு வேறு என்று ஆகிவிட்டது; அதுவே ஒற்றை மனிதனா யிருந்துவந்த என்னை, இரட்டை மனிதனாகவும் ஆக்கிவிட்டது - இத்தனையும் யாரால்? ஒரு பெண்ணால் அவளுக்கு அஞ்சி அஞ்சி நான் சாகிறேன், அணுவணுவாக இதுவே என் கதை ஐயா, என்று அவர் தம் கதையைக் கூறி முடித்தார்.

‘ஐயோ, பாவம் எவ்வளவு பெரிய மனிதர், நீங்கள்? உங்களையுமா இப்படி ஒரு பெண் ஆட்டி வைக்கிறாள்!” என்றான் அண்ணா.

“ஆம், நேற்றுவரை அவள் என்னை அப்படித்தான் ஆட்டிவைத்துக் கொண்டிருந்தாள். இன்று அவளால் என்னை ஆட்டி வைக்க முடியாது இன்று என்ன? இனி என்றுமே அவளால் என்னை ஆட்டி வைக்கமுடியாது!’ என்றார் அவர்.

‘ஏன் ?அவள் என்ன ஆனாள் இப்போது?’ என்று நான் கேட்டேன்.

‘கெட்ட காலத்திலும் எனக்கு ஒரு நல்ல காலம் - குற்றால அருவியில் குளிக்கப் போன அவளைத் தாமிரபரணி ஆறுஆட்கொண்டுவிட்டது’ என்றார் அவர் பெருமூச்சுடன்.

நல்லவேளை, அந்த மட்டும் அவளிடமிருந்து தப்பிப் பிழைத்தீர்களே?’ என்றேன் நானும் பெருமூச்சுடன்.