பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 வித்தன்

தவறு? இவர்கள் இருவரில் யார் குற்றவாளி, யார் நிரபராதி இவர்களில் யாரை நான் நம்புவது, யாரை நான் நம்பாமல் இருப்பது?

இப்படி நான் எண்ணிக் குழம்பிக் கொண்டிருந்த போது, “எனக்குத் தெரியும் நறுமணம். எல்லாம் எனக்குத் தெரியும்'என்றார் அவர்.

“என்ன தெரியும், உங்களுக்கு?”

‘இதே கதையை ஒரு சிறிது மாறுதலுடன் அவரும் உன்னிடம் சொல்லியிருக்கிறார் அல்லவா?”

“ஆம், அது எப்படித்தெரியும், உங்களுக்கு?”

‘அவரே சொன்னார், உன்னை ஏமாற்றுவதற்காக அப்படிச்சொன்னேன் என்று!”

‘அட பாவி!’

என்னை மறந்து நான் இப்படிச் சொன்னதும் அவர் சிரித்தார்; சிரித்துவிட்டுச் சொன்னார்.

‘இன்பம் புண்யத்தில் இல்லை, பாவத்தில் தான் இருக்கிறது என்பவராயிற்றே, அவர்? அவராப் பாவத்துக்கு அஞ்சப்போகிறார்?”

‘இந்தத் தகவல்களையெல்லாம் பெங்களூரில் நான் உங்களைச் சந்தித்த போதே நீங்கள் என்னிடம் சொல்லி யிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!”

‘அதனாலென்ன, இப்பொழுதும் ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை; இதோ பார்!” என்று தம் கைப் பையிலிருந்தக் கடிதங்கள் சிலவற்றை எடுத்து அவர் என்னிடம் காட்டினார். நான் அவற்றைப் பார்த்தேன்! அவருடைய கணவரைக் கொன்றவர் பேராசிரியர்தான் என்பதை நிரூபிப்பதற்கு அவை