பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை zos

“ஐயோ, வேண்டாம்; ஒரு குருநாதர் இருந்து படுத்திய பாடே போதும்'என்றாள் கல்யாணி.

ராமமூர்த்தி சிரித்தான்; சிரித்துவிட்டு, “விசாலம்தான் இருக்கிறாளே, வீட்டையும் குழந்தையையும் பார்த்துக் கொள்ள! நீயும் வாயேன்!"என்றான்.

‘இதோ வந்துவிட்டேன்!’ என்றுக் கல்யாணியும் கிளம்ப, மூவரும் கிழவன் கட்டிக்கொண்டு வந்திருந்த மாட்டு வண்டியை நோக்கி நடந்தார்கள்.

<> <> <>

கல்யாணி எதிர்பார்த்தபடி, அங்கே இருந்த நறுமணம் அவளுக்குத்தெரிந்த நறுமணமாக, அவளுடன் சேர்ந்துப் படித்த நறுமணமாகத்தான் இருந்தாள். ஆனாலும் அவளைக் கல்யாணத்துக்கு இணங்கவைப்பது ராமமூர்த்திக்கு மட்டுமல்ல; கல்யாணிக்கும் அவ்வளவு சுலபமாயில்லை.

‘சொல்வதைக் கேள், நறுமணம் அவர் இப்போது அடியோடு மாறிவிட்டாராம்; தான் செய்தப் பாவங்களுக் கெல்லாம் பிராயச்சித்தமாகத்தான் அவர் இப்போது உன்னைக் கல்யாணம் செய்துகொள்ளச் சம்மதித்திருக் கிறாராம்!'என்று கடைசியாக ஒரு போடு போட்டுப் பார்த்தாள் கல்யாணி.

“இருக்கலாம்; இருந்தாலும் எனக்கு என்ன தோன்று கிறது, தெரியுமா? நீங்கள் அவருக்கு என்னைக் கல்யாணம் செய்துகொடுக்கப்போவதாகத் தோன்றவில்லை; பலி கொடுக்கப் போவதாகத்தான் தோன்றுகிறது!"என்றாள் நறுமணம். n

‘ஆம்; ஆனால் உங்களை நாங்கள் அவருக்குப் பலிகொடுக்கப்போவது உங்களுக்காக அல்ல - உங்கள் குழந்தைக்காக; உங்களுடைய அண்ணனுக்காக!’ என்றான்