பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 விந்தன்

ஆயிற்று; பூட்டையும் அவரே மாட்டிக் கொண்டாயிற்று...

‘நான் வரட்டுமா? - கேட்டவர் அவர் தான், ‘வாருங்கள்!’ என்றாள் அவள்.

‘அவர் போய்விட்டார்; அப்பாடா!’ என்று ஊஞ்சலில் உட்கார்ந்து, அதை உந்தி உந்தித் தள்ளி ஆடியபடிக் கடிதத்தை எடுத்துப் பிரித்தாள் அவள்.

‘கல்யாணி, கல்யாணி’ “என்னவாம், கல்யாணிக்கு?”

இப்படி அலுத்துக்கொண்ட பிறகுதான் கூப்பிட்டவர் ‘அவர் என்று தெரிந்தது அவளுக்கு. “நீங்களா’ என்று சமாளித்தபடி வெளியே வந்தாள்.

‘நானேதான்; கதவைச் சாத்தித் தாளிட்டுக்கொள்!” என்றார் அவர், போகிற போக்கில்.

‘நல்லவேளை! இதைச் சொல்ல உள்ளே வராமல் வெளியே இருந்தபடி கூப்பிட்டுச் சொன்னீர்களே, அதைச் சொல்லுங்கள்!’ என்ற பெருமூச்சு விட்டுக் கொண்டே கதவைச் சாத்தித் தாளிட்டுவிட்டு உள்ளே வந்தாள் கல்யாணி.

ஊஞ்சல் பலகையின்மேல் வைத்துவிட்டு வந்த கடிதத்தைக் காணவில்லை!

எங்கே போயிருக்கும், அந்தக் கடிதம் காற்றில் எங்கேயாவது...

கூடம் முழுவதும் தேடிப் பார்த்தாள் அவள் காணவில்லை; காணவேயில்லை!

ஒருவேளை எலி, கிலி ஏதாவது இழுத்துக்கொண்டு போயிருக்குமோ?......