பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 விந்தன்

‘அவர் தான் பெரிய ஆளாயிருக்கிறாரென்றால், நீங்கள் அவரைவிடப் பெரிய ஆளாயிருக்கிறீர்களே?”

“நாங்கள் இருவரும் உனக்கு எந்த மூலைக்கு? இந்தா, பிடி!”

‘எனக்கு வேண்டாம், அம்மா என்னைப் பற்றி அப்படியெல்லாம் நினைக்காதீர்கள், நான் நிரபராதி!’

‘அதனால்தான் அவர் கொடுத்த பத்து ரூபாயை வாங்கிக் கொண்டு யாரோ பெற்ற குழந்தையை உன்னுடைய குழந்தை என்று சொன்னாயா?”

‘'நான் என்ன செய்வேன், அம்மா என்னுடைய நிலையில் இந்தக் குழந்தையைக் கொண்டு போய் என்னால் எப்படி வளர்க்க முடியும். ஐயா?’ என்றேன்; இந்தா பத்து ரூபாய், பாலுக்கு வைத்துக்கொள்!” என்றார்; ‘சரி என்று வாங்கிக் கொண்டேன்!!

‘பாலுக்குக் காவலாயிருந்தது சரி, பூனைக்குத் தோழனாக இருக்கலாமா?”

‘எனக்குத் தெரிந்தவரை அவர் பூனை இல்லை; அவ்வளவுதான் இப்போது என்னால் சொல்ல முடியும்; நான் வருகிறேன்!” என்றுத் திரும்பினாள் விசாலம்.

‘கடிதம் வேண்டாமா?’ என்றாள் கல்யாணி. ‘கொடுக்க விரும்பினால் கொடுங்கள்; இல்லாவிட்டால் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்!”

‘அவர் கேட்டால்?” ‘கேட்க மாட்டார்; கடிதம் மறுபடியும் உங்கள் கைக்கு வந்துவிட்டது அவருக்குத் தெரியும்!”

‘'எதுதான் தெரியாது அவருக்கு? நீ போய் வா; குழந்தை இங்கேயே இருக்கட்டும்!"