பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 31

‘இருக்கலாம்; கடிதம் இதன் கதையைச் சொல்ல விரும்பாமல் இருக்கலாம்!’ என்றான் அவன்.

‘இந்தப் பணத்தை யார், யாருக்காகக் கொடுத்தது? அதையாவது சொல்ல முடியுமா, உங்களால்?”

‘அதையா கேட்கிறீர்கள்?’ - அவ்வளவுதான்; அழுகை பொத்துக்கொண்டு வந்துவிட்டது அவனுக்கு ஊஞ்சல் சங்கிலியைப் பிடித்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான்:

தர்மசங்கட மாகப் போய்விட்டது கல்யாணிக்கு. ‘சிரிக்கிற பெண்களையும் அழுகிற ஆண்களையும் நம்பக் கூடாது’ என்கிறார்களே, அந்த வகையில் சேர்ந்தவனா யிருப்பானோ, இவனும்?.....

அதற்குமேல் அவளைச் சிந்திக்க விடவில்லை, அவன். அழுத கண்களை அவசர அவசரமாகத் துடைத்துக் கொண்டு, ‘நான் வந்த வேலை முடிந்துவிட்டது; பணத்தை எங்கே சேர்க்க வேண்டுமோ, அங்கே சேர்த்துவிட்டேன் அந்தக் கடிதத்தைத் தபாலில்தானே சேர்க்க வேண்டும், உங்களுக்கு? - கொடுங்கள்; சேர்த்து விடுகிறேன்!” என்றான் கையை நீட்டியபடி.

“ஊஹாம்!” கல்யாணியின் வாய் அசையவில்லை; தலைமட்டுந் தான் அசைந்தது.

‘நம்பாதீர்கள்; யாரை நம்ப வேண்டுமோ அவனை நம்பவே நம்பாதீர்கள்!’

‘கலகல வென்று நகைத்தான் அவன். நகைத்து விட்டு, ‘மனிதன்; சின்னஞ் சிறு மனிதன் பிறக்கும் போது நீ எவ்வளவு இனிமையானவனா யிருக்கிறாயடா,