பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 41

‘இதற்குள் ஏதாவது நடந்துவிட்டிருந்தால்?”

‘நடந்த இடத்தை வேடிக்கை பார்ப்பதுபோல் பார்ப்பது; கடிதம் ஏதாவது கிடைத்தால் யாருக்கும் தெரியாமல் அதை எடுத்துக்கொண்டு வந்து விடுவது!”

‘இருக்கவே இருக்கிறது, அன்பு: அதைப் பண்போடு கலந்து பயன்படுத்தி அவளை மீண்டும் அழைத்துக் கொண்டு வருவது; அவளுடன் சிறிது நாட்கள் வாழ்வது போல் வாழ்ந்து, அவளுடைய அண்ணனைத் தீர்த்துக் கட்டியதுபோல் அவளையும் ஏதாவது ஒருவிதத்தில் தீர்த்துக் கட்டிவிடுவது!’ -

‘எனக்கென்னமோ, இதெல்லாம் நம்மைப் போன்ற பேராசிரியர்கள் செய்யக் கூடிய வேலையாகத் தோன்ற விலலை!”

‘நன்றாகச் சொன்னாய், நன்றாகச் சொன்னாய்! - உனக்கு மட்டுமென்ன, உலகத்துக்கே அப்படித் தோன்றாது - நம்மைப் போன்ற கற்றோருக்குள்ள அரண் அதுதான் - வா தம்பி, வா!’

‘உணர்ச்சிக்கு இடம் கொடுக்காதே, உணர்ச்சிக்கு இடம் கொடுக்காதே என்று ஊருக்கு உபதேசம் செய்து விட்டு, நாம் மட்டும் உணர்ச்சிக்கு இடம் கொடுத்ததால் வந்த வினை இது!’ என்று அலுத்துக்கொண்டே எழுந்தான் ராமமூர்த்தி,

‘இன்பமும் துன்பமும் இரவும் பகலும்போல மாறி மாறி வருவதுதானே? அஞ்சற்க!’ என்று அபயம் அளித்தார் டாக்டர்.

அந்தச் சமயத்தில்....

ஏதோ ஒரு பாட்டு ஏற்கனவே அவர்கள் பலமுறை கேட்ட பாட்டு - ஆம், அதே பாட்டுத்தான்: